டிவி தொடருக்காக ஜிவி பிரகாஷ் கம்போஸ் செய்த பாடல்: செம வைரல்

  • IndiaGlitz, [Sunday,July 17 2022]

தமிழ் திரையுலகின் பிஸியான நடிகர் மற்றும் இசை அமைப்பாளராக இருக்கும் ஜிவி பிரகாஷ் தொலைக்காட்சி தொடருக்காக கம்போஸ் செய்த ஒரு பாடல் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் ஒளிபரப்பாகி வரும் தொலைக்காட்சி தொடர் ’கனா காணும் காலங்கள்’. பள்ளி வாழ்வை நம் கண்முன் நிறுத்தும் அளவுக்கு மிகவும் பிரபலமான இந்த தொடருக்கு நடிகரும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ஒரு பாடலை கம்போஸ் செய்துள்ளார். ’எல்லாமே ஜாலிதான்’ என்ற இந்தப் பாடல் கேட்கும் போது அனைவரும் எழுந்து ஆட வைக்கும் அளவுக்கு ஜாலியான பாடலாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகிய இந்த பாடலை ஜிகேபி எழுதியுள்ளார் என்பதும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான ஆதித்யா இந்த பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடல் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.