சிவகார்த்திகேயன் - சாய் பல்லவி ரொமான்ஸ் பாடல்.. சூப்பர் அறிவிப்பு வெளியிட்ட ஜிவி பிரகாஷ்..!

  • IndiaGlitz, [Tuesday,September 24 2024]

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடித்த அமரன் திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் குறித்த தகவலை இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் வெளியிட்டுள்ளார்.

சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்ளிட்ட பலர் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவான திரைப்படம் அமரன். இந்த படத்தின் படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன் முடிவடைந்து, தற்போது விறுவிறுப்பான தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. தீபாவளி ரிலீஸ் என்பதால், அனைத்து பணிகளையும் முடிக்க படக்குழுவினர் இரவு பகலாக பணி செய்து வருவதாக கூறப்படுகிறது.

உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் சமீபத்தில் தனது சமூக வலைத்தளத்தில் அமரன் படத்தின் முதல் சிங்கிள் பாடல் ஒரு ரொமான்ஸ் பாடல் என்றும், சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடித்துள்ள இந்த பாடலின் தலைப்பு ஹேய் மின்னலே என்றும் அறிவித்துள்ளார்.

மேலும், இன்னும் சில நாட்களில் இந்த பாடல் வெளியாகும் என கூறியுள்ளதை தொடர்ந்து, சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ரசிகர்கள் இந்த பாடலை மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பவன் கல்யாணிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் கார்த்தி! என்ன காரணம்?

நடிகர்  கார்த்தி, பிரபல தெலுங்கு நடிகர் மற்றும் துணை முதலமைச்சர் பவன் கல்யாணிடம் தன்னுடைய சமூக வலைதளங்கள் மூலம் மன்னிப்பு கேட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'மனுஷன் அங்க நிக்கிறாய்யா' மாதம்பட்டி ரங்கராஜ் குறித்து பிரபல சமையற்கலைஞர் வெங்கடேஷ் பட் பேசியுள்ளார்.

பிரபல சமையற் கலைஞரும், மாதம்பட்டி ரங்கராஜ் ஹாஸ்பிடாலிட்டி நிறுவனத் தலைவரும், குக் வித் கோமாளி சீசன் 5ன் ஜட்ஜ்யும், மெஹந்தி சர்கஸ், Penguin ஆகிய இரு படங்களில் நடித்துள்ள நடிகருமான...

ஒவ்வொரு ரசிகனுக்கும் இருக்கும் கனவு.. விஜய் டிவி புகழ் சந்தித்த உச்ச நட்சத்திரம்..!

ஒவ்வொரு ரசிகனுக்கும் இருக்கும் கனவு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை நேரில் சந்திப்பது. அந்த தருணம் எனக்கு கிடைத்தது என்று விஜய் டிவி புகழ், தனது இன்ஸ்டாகிராம்

எல்லோரும் ரொம்ப நாளா கேட்டது இதுதான்: 2 வீடியோக்களை வெளியிட்ட மணிமேகலை..!

எல்லோரும் ரொம்ப நாளாக கேட்ட குக் அக்கா இவங்கதான் என்று மணிமேகலை இரண்டு வீடியோக்களை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

ஆளும் புதுசு.. ஆட்டமும் புதுசு.. பிக்பாஸ் சீசன் 8 தொடங்கும் தேதி அறிவிப்பு..!

தமிழின் முன்னணி தொலைக்காட்சியான  விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது.