ஜிவி பிரகாஷ்-சைந்தவி ஜோடிக்கு கிடைத்த 'பெற்றோர்' புரமோஷன்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ், பாடகி சைந்தவியை கடந்த 2013ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இருவரும் பள்ளி காலத்தில் இருந்தே பழகியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சமீபத்தில் சைந்தவி கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் வெளிவந்ததை அடுத்து இன்று அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்ததாகவும் தாயும் சேயும் நலமாக இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இதனையடுத்து ஜிவி பிரகாஷ்-சைந்தவி தம்பதியினர் பெற்றோர் என்ற புரமோஷனை பெற்றுள்ளனர்.
ஜிவி பிரகாஷ் -சைந்தவி தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்ததை அடுத்து சமூக வலைதளங்களில் திரையுலகினர் பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments