ஜிவி பிரகாஷ்- சைந்தவி பாடிய காதல் ரசம் சொட்டும் பாடல்: வீடியோ வைரல்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது மனைவி சைந்தவியுடன் பாடிய காதல் ரசம் சொட்டும் பாடலின் வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
’காம்ப்ளக்ஸ்’ என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற ’கத்தி கூவுது காதல்’ என்ற பாடலின் வீடியோ சற்று முன் வெளியாகி உள்ளது. கார்த்திக் ராஜாவின் இசையில் உருவாகிய இந்த பாடலை ஜிவி பிரகாஷ் மற்றும் அவரது மனைவி சைந்தவி இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடலை ஞானகரவேல் என்பவர் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி ஆகிய இருவரும் இணைந்து பல பாடல்கள் பாடி இருந்தாலும் காதல் ரசம் சொட்ட சொட்ட உருக வைக்கும் இந்த பாடல் முதல் முறை கேட்கும்போதே ரசிகர்களை கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வெங்கட் செங்குட்டுவன், இவானா, எம்.எஸ்.பாஸ்கர், ஆடுகளம் நரேன் உள்பட பலரது நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை மந்த்ரா வீரபாண்டியன் என்பவர் இயக்கியுள்ளார். இந்த பாடலின் முதல் சில வரிகள் இதோ:
கத்திக்கூவுது காதல்,
உனைக்கட்டி தழுவுது கண்கள்
ஓராண்டு ஒத்திகை பார்த்தேன்
காதல் நான் சொல்ல
ஒரு நொடியில் கனவாய் கலைந்தது
எங்கோ நீ செல்ல
கண்ணீரில் கூட அன்று ஈரம் இல்லை
காலத்தின் தோழனாக நான் இல்லை
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments