வெற்றிமாறன் முயற்சியால் மீண்டும் இணைந்த ஜிவி பிரகாஷ் - சைந்தவி.. நாளை ஒரு இன்ப அதிர்ச்சி..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி ஆகிய இருவரும் பிரிவதாக அறிவித்த நிலையில் தற்போது இயக்குனர் வெற்றிமாறன் முயற்சியால் மீண்டும் அவர்கள் இருவரும் இணைந்துள்ள தகவல் வெளியாகியுள்ளன.
பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது சிறுவயது தோழி சைந்தவியை கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் என்பதும் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இருவரும் பிரிவதாக தங்களது சமூக வலைதளங்களில் அறிவித்தார்கள் என்பதும் தெரிந்தது.
இந்த நிலையில் வெற்றிமாறன் தயாரிப்பில், குணச்சித்திர நடிகர் போஸ் வெங்கட் இயக்கத்தில் உருவாகியுள்ள ’சார்’ என்ற திரைப்படத்தின் சிங்கிள் பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்திற்கு சித்து இசையமைத்துள்ள நிலையில் ‘பனங்கருக்கா’ என்ற சிங்கிள் பாடலை ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி இணைந்து பாடியுள்ளனர் என்றும் விவேகா இந்த பாடலை எழுதியுள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அனேகமாக ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி ஆகிய இருவரும் பிரிவதாக அறிவிப்பதற்கு முன்பே இந்த பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட்டு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதலில் ’மபொசி’ என இந்த படத்திற்கு டைட்டில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அதன் பின்னர் ’சார்’ என்ற டைட்டில் மாற்றப்பட்டது. போஸ் வெங்கட் இயக்கத்தில் வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகி உள்ள இந்த படத்தில் விமல் மற்றும் சாயாதேவி முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
*Twitter*
— Bose Venkat (@DirectorBose) July 4, 2024
A soul-stirring melodious #PANANGARUKKA First Single from movie #SIR will be launched by @gvprakash Tomorrow @ 06PM
Vocals @gvprakash & #Saindhavi 🎙️
Lyrics @Viveka_Lyrics ✍🏻
A @Music_Siddhu musical 🎹
Directed by @DirectorBose starring @ActorVemal, pic.twitter.com/eBenuoklNr
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments