close
Choose your channels

மிக வேகமாக பரவும் ஜிவி பிரகாஷ் - சைந்தவி விவாகரத்து வதந்தி.. அமைதி காக்கும் தம்பதிகள்..!

Monday, May 13, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது மனைவி சைந்தவியை விவாகரத்து செய்யப் போவதாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் மிக வேகமாக வதந்தி பரவிக் கொண்டிருக்கும் நிலையில் இதற்கு ஜி.வி பிரகாஷ் - சைந்தவி தம்பதியினர் இன்னும் விளக்கம் அளிக்காமல் உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான ஜிவி பிரகாஷ் பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார் என்பதும் அவர் நடித்த சில படங்கள் நல்ல வெற்றியை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கடந்த 2013 ஆம் ஆண்டு சிறு வயதில் இருந்தே பழகிய பாடகி சைந்தவியை, ஜிவி பிரகாஷ் திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஜிவி பிரகாஷ் தனது மனைவியை விவாகரத்து செய்ய போவதாக நேற்று முதல் ஒரு செய்தி மிக வேகமாக பரவி வருகிறது. இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருப்பதாகவும் சில மாதங்கள் பிரிந்து வாழ்வதாகவும் கூட வதந்தி பரவி வருகிறது. இந்த நிலையில் மிக வேகமாக பரவி வரும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க விரைவில் ஜிவி பிரகாஷ் சைந்தவி தம்பதியினர் இதுகுறித்து விளக்கம் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment