ஜிவி பிரகாஷ்-ரைசா படத்தின் வித்தியாசமான டைட்டில்!

  • IndiaGlitz, [Thursday,March 07 2019]

ஒரு ஆண்டில் அதிக படங்களில் நடித்து கொண்டிருக்கும் நடிகர்களில் ஒருவராக ஜிவி பிரகாஷ் நடித்த படங்கள் இவ்வருடம் அடுத்தடுத்து வெளிவரவுள்ள நிலையில் அவர் நடிக்கவிருக்கும் இன்னொரு படத்தின் டைட்டில் சற்றுமுன் வெளியாகியுள்ளது.

அறிமுக இயக்குனர் கமல்பிரகாஷ் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ், பிக்பாஸ் புகழ் ரைசா இணையும் இந்த படத்திற்கு 'காதலிக்க யாருமில்லை' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. கடந்த 1964ஆம் ஆண்டு ரவிச்சந்திரன், முத்துராமன் நடித்த 'காதலிக்க நேரமில்லை' படம் போல் இந்த படமும் ஒரு காமெடி கலந்த ரொமான்ஸ் படம் என்று கூறப்படுகிறது.

காவ்யா மகேஷ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க, வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்ய சிவாநந்தேஷ்வரன் படத்தொகுப்பு பணியை கவனிக்கின்றார். இந்த படத்தில் குருசோமசுந்தரம், யோகிபாபு ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சூர்யாவை அடுத்து சிம்புவுக்கு வில்லனாகும் ஆர்யா?

சூர்யா நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கி வரும் 'காப்பான்' திரைப்படத்தில் ஆர்யா வில்லன் கேரக்டரில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சிம்பு நடிக்கும் படத்திலும் ஆர்யா வில்லனாக நடிக்க

எம்.ஜி.ஆர்-சிவாஜி இணைந்து நடித்த ஒரே படத்தின் நாயகி காலமானார்

மக்கள் திலகம் எம்ஜிஆர் மற்றும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஆகிய இருவரும் ஒரே காலகட்டத்தில் முன்னணி நடிகர்களாக இருந்தாலும் இருவரும் இணைந்து நடித்த ஒரே படம் என்ற பெருமையை பெற்றது 'கூண்டுக்கிளி'

அதிக பேராசையால் அந்தரத்தில் தொங்கும் தேமுதிக

ஆரம்பத்தில் இருந்தே அதிமுக கூட்டணியில் இணைய விஜயகாந்தின் தேமுதிக முடிவெடுத்துவிட்டாலும், அதிமுக கூட்டணியில் கூடுதல் தொகுதியை பெற திமுகவிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.

'பிச்சைக்காரன்' இயக்குனர் சசியின் அடுத்த பட டைட்டில் என்ன?

விஜய் ஆண்ட்னி நடிப்பில் இயக்குனர் சசி இயக்கிய 'பிச்சைக்காரன்' திரைப்படம் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. தமிழை போலவே தெலுங்கிலும் இந்த படம் ரிலீஸ் ஆகி சாதனை வசூல் செய்தது

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகர் ஹரிஷ் கல்யாண் நடித்த 'பியார் பிரேமா காதல்' திரைப்படம் இளைஞர்களின் வரவேற்பை பெற்ற நிலையில் அவர் நடித்த அடுத்த படமான 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டது