ஜிவி பிரகாஷ்-ரைசா வில்சன் படத்தின் டைட்டில் குறித்த தகவல்

  • IndiaGlitz, [Monday,March 04 2019]

நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் நடித்த 'சர்வம் தாளமயம்' சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து அவர் கமல் பிரகாஷ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் என்றும், இந்த படத்தில் ஐடி துறையில் பணிபுரியும் ஊழியராக அவர் நடித்து வருகிறார் என்றும் வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

ஜிவி பிரகாஷ் ஜோடியாக பிக்பாஸ் ரைசா நடிக்கும் இந்த படத்தின் பூஜை கடந்த மாதம் 21ஆம் தேதி நடைபெற்ற நிலையில் இந்த படத்தின் டைட்டில் வரும் 7ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ஃபேண்டசி காமெடி படமாக உருவாகவிருக்கும் இந்த படத்தை ஆரா சினிமாஸ் தயாரிக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்பொது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தகக்து.