ஜிவி பிரகாஷ் - ஐஸ்வர்யா ராஜேஷ் படத்தின் டைட்டில் அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Thursday,May 04 2023]

நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு சற்றுமுன் வெளியாகியுள்ளது.

ஜிவி பிரகாஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய வேடத்தில் நடிக்கும் திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் சற்றுமுன் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் தீபிகா என்ற கேரக்டரில், ஜிவி பிரகாஷ் அர்ஜுன் என்ற கேரக்டரில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தீபிகா மற்றும் அர்ஜூன் ஆகிய பெயர்களில் உள்ள முதல் இரண்டு எழுத்துக்கள் தான் இந்த படத்தின் டைட்டில் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த படத்தின் டைட்டில் ’DeAr’ ஆகும்.

ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகும் இந்த படத்தை ஆனந்த் ரவிச்சந்திரன் என்பவர் இயக்க இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் இந்த படத்தில் நடிக்க மற்ற நட்சத்திரங்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

ஜெகதீஷ் சுந்தரமூர்த்தி ஒளிப்பதிவில் ருகேஷ் படத்தொகுப்பில் உருவாகும் இந்த படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகிறது.

More News

முன்கூட்டியே தொடங்கப்படுகிறதா பிக்பாஸ் தமிழ் சீசன் 7? கமல்ஹாசன் தொகுத்து வழங்குவாரா?

பிக்பாஸ் தமிழ் இதுவரை 6 சீசன்கள் முடிவடைந்த நிலையில் 7வது சீசன் இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'ஜெயிலர்' ரிலீஸ் தேதி.. சன் பிக்சர்ஸ் அறிவிப்பு..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வரும் 'ஜெயிலர்' படத்தின் அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என சன் பிக்சர்ஸ் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் சற்றுமுன் அந்த மாஸ் அறிவிப்பு வெளியாகி

'லால் சலாம்' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு எங்கே? விஷ்ணு விஷால் கொடுத்த மாஸ் தகவல்..!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் 'லால் சலாம்' படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு திருவண்ணாமலை அருகே நடைபெற்றது

ஆன்மீக நகரில் பிறந்த நாளை கொண்டாடிய த்ரிஷா .. க்யூட் புகைப்படங்கள்..!

நடிகை த்ரிஷா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலக பிரபலங்கள் ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

'மாவீரன்' ரிலீஸ் தேதியில் திடீர் மாற்றம்? இதுதான் காரணமா?

சிவகார்த்திகேயன் நடித்து வரும் இரண்டு திரைப்படங்களின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் அவற்றில் ஒன்றான 'மாவீரன்' ரிலீஸ் தேதி மாற்றப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்