ஃபர்ஸ்ட் நைட்ல பொண்ணு ஏன் தூங்கக்கூடாது: ஜிவி பிரகாஷின் 'டியர்' டீசர்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஜிவி பிரகாஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய வேடங்களில் நடித்த ’டியர்’ என்ற திரைப்படம் வரும் 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
வெவ்வேறு இடங்களில் செல்லமாக வளரும் ஜிவி பிரகாஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகிய இருவருக்கும் பெற்றோர் பார்த்து திருமணம் செய்து வைக்கின்றனர். திருமணம் ஆன பின்னர் இருவருக்கும் ஏற்படும் ஒரு பிரச்சனை அந்த பிரச்சனையை எப்படி இருவரும் சமாளிக்கிறார்கள் என்பதுதான் இந்த படத்தின் கதையாக உள்ளது.
அதாவது ஐஸ்வர்யா ராஜேஷ் குறட்டை விடும் பழக்கம் உடையவர் என்றும் அந்த குறட்டையால் ஜிவி பிரகாஷ்க்கு ஏற்படும் சிக்கல், கோபம், அதனால் ஏற்படும் சண்டை ஆகியவைகளை இருவரும் எப்படி சமாளித்தார்கள் என்பதுதான் இந்த படத்தின் காமெடியான கதை என்று டிரைலரில் இருந்து தெரிய வருகிறது.
ஜிவி பிரகாஷ் வழக்கம்போல் தனது இளமை துள்ளும் நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். காமெடியும் சோகமும் அவருக்கு நன்றாக வருகிறது. அதேபோல் ஐஸ்வர்யா ராஜேஷ் அவருக்கு இணையாக நடித்துள்ளார் என்பதும் ட்ரைலரிலிருந்து பெரிய வருகிறது. குறிப்பாக ’உனக்கு குறட்டை விடும் பழக்கம் இருக்கிறது என்பது மாப்பிள்ளைக்கு தெரியக்கூடாது என்றால் ஃபர்ஸ்ட் நைட்டில் நீ தூங்க கூடாது என்று அவருடைய அம்மா அறிவுரை கூறுவது உட்பட பல காட்சிகள் காமெடியாகவே நகர்கிறது.
ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகிய இந்த படம் நிச்சயம் ஜிவி பிரகாஷின் இன்னொரு வெற்றி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments