ஆதிக் ரவிச்சந்திரனின் இரண்டாம் பாக படம் விரைவில் ஆரம்பம்

  • IndiaGlitz, [Thursday,June 29 2017]

சிம்பு நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி படுதோல்வி அடைந்தது மட்டுமின்றி இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் அவ்வளவு தான் என்றும் இந்த படத்தின் தோல்வியால் இதன் இரண்டாம் பாகம் கைவிடப்பட்டதாகவும் கூறப்பட்டது.
ஆனால் வெகுவிரைவில் ஆதிக் ரவிச்சந்திரன் தனது படத்தின் இரண்டாம் பாகத்தின் வேலையை ஆரம்பிக்கவுள்ளாராம். அந்த படம் 'AAA' படத்தின் இரண்டாம் பாகம் இல்லை என்பதும் அது 'த்ரிஷா இல்லைனா நயன்தாரா' படத்தின் இரண்டாம் பாகம் என்பதும் தான் இங்கே குறிப்பிடத்தக்கது.
த்ரிஷா இல்லைனா நயன்தாரா' படத்தின் தயாரிப்பாளர் சமீபத்தில் ஆதிக்கை சந்தித்து 'AAA' படத்தின் தோல்விக்கு நீங்கள் காரணமில்லை என்று எனக்கு தெரியும் என்றும் த்ரிஷா இல்லைனா நயன்தாரா' படத்தின் இரண்டாம் பாகத்தை நீங்கள் எப்போது தொடங்கினாலும் நான் தயாரிக்க தயார் என்றும் கூறியுள்ளாராம். மேலும் இந்த படத்தில் முதல் பாகத்தில் நடித்த ஜி.வி.பிரகாஷே நடிப்பார் என்றும் கூறப்படுகிறது.