இன்று மாலை ஜி.வி.பிரகாஷின் சூப்பர் ஸ்டார் டைட்டில்

  • IndiaGlitz, [Wednesday,January 20 2016]

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கி வரும் '2.0' என்ற பிரமாண்டமான படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனம், இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படத்தையும் தயாரித்து வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.


இந்நிலையில் இந்த படத்தின் டைட்டிலை பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இன்று மாலை ஐந்து மணிக்கு சமூக இணையதளத்தில் வெளியிடுகிறார். இந்த டைட்டில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த படம் ஒன்றின் புகழ்பெற்ற வசனமாக இருக்கும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று ஜி.வி.பிரகாஷ் சூப்பர் ஸ்டார் ரஜினியை '2.0' படத்தின் செட்டிற்கு சென்று சந்தித்து ஆசிபெற்றார். இந்த தகவலை ஜி.வி.பிரகாஷ் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.

ஜி.வி.பிரகாஷ், 'கயல்' ஆனந்தி நடித்து இசையமைக்கும் இந்த படத்தை இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு 40% முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது.

More News

'பெங்களூர் நாட்கள்' இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு

ஆர்யா, பாபி சிம்ஹா, ராணா, ஸ்ரீதிவ்யா, பார்வதி, சமந்தா, ராய்லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்த 'பெங்களூர் நாட்கள்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் முடிவடைந்து ...

சுசீந்திரன் இயக்கத்தில் உதயநிதியின் அடுத்த படபூஜை

உதயநிதி ஸ்டாலின் நடித்த 'கெத்து' திரைப்படம் கடந்த பொங்கல் தினத்தில் வெளியாகி தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றது...

24' படத்தில் சூர்யாவின் 3 வேடங்கள் என்னென்ன? புதிய தகவல்

சூர்யா நடிப்பில் விக்ரம்குமார் இயக்கியுள்ள '24' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ்...

தனுஷின் 'அம்மா கணக்கு' ரிலீஸ் தேதி அறிவிப்பு

தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தயாரித்து வரும் 'அம்மா கணக்கு' என்ற படத்தின் பூஜை கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றதை ஏற்கனவே அறிவித்தோம்....

தனுஷின் 'அம்மா கணக்கு' ரிலீஸ் தேதி அறிவிப்பு

தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தயாரித்து வரும் 'அம்மா கணக்கு' என்ற படத்தின் பூஜை கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றதை ஏற்கனவே அறிவித்தோம்....