மணிரத்னம் அடுத்த படத்தில் ஜிவி பிரகாஷ்-மடோனா!

  • IndiaGlitz, [Friday,April 12 2019]

மணிரத்னம் இயக்கவுள்ள மல்டிஸ்டார் படமான 'பொன்னியின் செல்வன்' படத்தின் ஆரம்பகட்ட பணிகள் ஒருபக்கம் நடந்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் அவரது தயாரிப்பில் உருவாகவுள்ள 'வானம் கொட்டட்டும்' படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் தேர்வு நடந்து வருகிறது.

இந்த படத்தில் விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் மற்றும் மடோனா செபாஸ்டியன் ஆகியோர்களும் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக மடோனாவும், தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷும் நடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மணிரத்னம் இயக்கிய 'அக்னி நட்சத்திரம்' படம் போல் இந்த படத்தில் விக்ரம் பிரபு,  ஐஸ்வர்யா ராஜேஷ் இடையே நடக்கும் அண்ணன் ,தங்கை பிரச்சனைதான் கதை என்று கூறப்படுகிறது. மணிரத்னம் கதை வசனத்தில் உருவாகும் இந்த படத்தை அவரது உதவி இயக்குனர் தனா இயக்கவுள்ளார். இந்த படத்திற்கு '96' புகழ் கோவிந்த் வசந்தா இசையமைக்கவுள்ளார். 

மேலும் இந்த படத்தில் 20 வருடங்களுக்கு பின் சரத்குமார்-ராதிகா ஜோடியாக நடிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 'சென்னையில் ஒரு நாள்' படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தாலும் இருவரும் இணையும் ஒரு காட்சி கூட அந்த படத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.