பாலாவை அடுத்து வெற்றிப்பட இயக்குனருடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்

  • IndiaGlitz, [Monday,February 19 2018]

'டார்லிங்' படத்தில் நடிகராக அறிமுகமான பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், பல படங்களில் நடித்திருந்தாலும், பாலாவின் 'நாச்சியார்' படத்தில் ரசிகர்களின் மனதில் நிற்கும் வகையான 'காத்து' என்ற கேரக்டரில் அவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. பாலாவின் கைராசிப்படி 'நாச்சியார்' படத்திற்கு பின் ஜி.வி.பிரகாஷின் நடிப்பு மென்மேலும் மெருகேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு வெளியான வெற்றிப்படங்களில் ஒன்றான லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'அறம்' படத்தை இயக்கிய கோபி நயினார் இயக்கவுள்ள அடுத்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த படம் வடசென்னையை மையமாக கொண்டது என்பது மட்டுமின்றி கால்பந்து விளையாட்டு குறித்த பரபரப்பான படம் என்று கூறப்படுகிறது. இந்த படத்திற்கு 'கருப்பர் நகரம்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் வரை பொறுமை காப்போம்.

More News

தளபதி விஜய்யின் மிரட்டலான மெர்சல் படத்தின் அடுக்கடுக்கான சாதனைகள்

விஜய் நடித்த மெர்சல்' திரைப்படம் கடந்த ஆண்டு தீபாவளி தினத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஓப்பனிங் முதல் நல்ல வசூலை கொடுத்து கொண்டிருந்த

ரஜினி- கமல் சந்திப்பு பில்டப் செய்யப்படுகிறது: அமைச்சர் ஜெயகுமார்

ரூஸ்வெல்ட்- வின்ஸ்டன் சர்ச்சில் சந்திப்பு போல ரஜினி- கமல் சந்திப்பு பில்டப் செய்யப்படுகிறது. ரஜினி- கமல் சந்திப்பால் நாட்டில் எதுவும் நடக்கப்போவது கிடையாது

தமிழ் படங்களுக்கு இணையாக கெத்து காட்டிய 'பிளாக் பாந்தர்' வசூல்

கோலிவுட் திரையுலகில் இருந்து வாரம் ஒன்றுக்கு குறைந்தது 4 தமிழ் திரைப்படங்கள் வெளியாகி வரும் நிலையில் ஒருசில ஆங்கில படங்கள் தமிழ்ப்படங்களுக்கு இணையாக வசூலை குவித்து ஆச்சரியம் அளித்து வருகிறது.

பாலா-ஜோதிகாவின் 'நாச்சியார்; ஓப்பனிங் வசூல் எப்படி?

கடந்த வெள்ளியன்று மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளிவந்த பாலாவின் 'நாச்சியார்' திரைப்படம் பெரும்பாலான பாசிட்டிவ் விமர்சங்னகள் பெற்று திரையரங்குகளில் ஓடி வருகிறது.

விஷால் எடுத்த 15 நாள் முடிவு என்ன தெரியுமா?

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளர் பணிகள், தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியின் பணிகள், சமீபத்தில் நடைபெற்று முடிந்த மலேசிய நட்சத்திர விழா பணிகள்