பிரபல பாலிவுட் இயக்குனரின் அடுத்த படத்தில் ஜிவி பிரகாஷ்.. பான் -இந்தியா படமா?

  • IndiaGlitz, [Saturday,March 16 2024]

சூர்யா, தனுஷ் உட்பட தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் தற்போது பாலிவுட்டிலும் நடித்து வருகின்றனர் என்பதும் சில படங்கள் பான் இந்திய படங்களாக உருவாக்கி வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். அந்த வகையில் பாலிவுட்டின் முன்னணி இயக்குனரின் அடுத்த படத்தில் நாயகனாக ஜிவி பிரகாஷ் நாயகனாக நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

பாலிவுட் திரையுலகின் முன்னணி இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் அனுராக் காஷ்யப். இவர் நயன்தாரா நடித்த ’இமைக்கா நொடிகள்’ உட்பட சில தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் அனுராக் காஷ்யப். இயக்கும் அடுத்த திரைப்படத்தில் ஜிவி பிரகாஷ் நாயகனாக நடிக்க உள்ளார் என்றும் இந்த படம் தமிழ், ஹிந்தி உள்பட ஐந்து மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே அனுராக் காஷ்யப் இயக்கத்தில் உருவான ’அக்லி’ என்ற திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்த நிலையில் தற்போது அவரது இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜிவி பிரகாஷ் தற்போது ’தங்கலான்’ உட்பட சில படங்களுக்கு இசையமைத்தும் ’ரிபெல்’ உட்பட சில படங்களில் நடித்தும் பிசியாக இருக்கும் நிலையில் தற்போது மேலும் ஒரு படத்தில் அவர் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

தான் உடுத்திய ஆயிரக்கணக்கான சேலைகளை ஆன்லைனில் விற்கும் சேரன் பட நடிகை.. விலை எவ்வளவு?

சேரன் நடித்த படங்கள் உள்பட சில தமிழ் படங்களிலும் பல மலையாள படங்களிலும் நடித்த நடிகை தன்னிடம் உள்ள ஆயிரக்கணக்கான சேலைகளை ஆன்லைன் மூலம் விற்பனை செய்வதாக இன்ஸ்டாகிராமில்

விஜயா அவன வந்து அடி பாட்டி சொன்ன வார்த்தை , விஜயகாந்தின் அன்பு - சமுத்திரக்கனி சொன்ன சுவாரசியம்.

சினிமாவிற்கு வந்த காலம் முதலே மக்களுக்கு நன்மை செய்வதற்காக கட்சி துவங்க வேண்டும் என்று ஆசைப்பட்டிருந்தார். கிட்டத்தட்ட 20 வருடங்களாக வாரம் ஒரு முறை ரசிகர் மன்ற உறுப்பினர்களை சந்தித்து பேசி வந்தார்....

ரஜினியை விட 3 வயது கம்மிதான்.. ஆனால் எப்படி இருக்காரு பாருங்க.. ஜாக்கிசான் லேட்டஸ்ட் புகைப்படம்..!

90ஸ் கிட்ஸ்களின் விருப்பத்துக்குரிய நடிகர் என்றால் ஜாக்கிசான் என்று பலர் கூறுவார்கள், அந்த அளவுக்கு அவரது ஆக்சன் படங்கள் இந்தியா முழுவதும் பிரபலமானது என்பது தெரிந்தது

அசோக்செல்வன் அடுத்த படம்.. ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்ட விஜய்சேதுபதி, ஆர்யா..!

நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் உருவாகும் அடுத்த படமான  “எமக்குத் தொழில் ரொமான்ஸ்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை  நடிகர்கள் விஜய் சேதுபதி, ஆர்யா வெளியிட்டனர்.

ரூ.100 கோடி பட்ஜெட் படத்தில் ராகவா லாரன்ஸ்? சூப்பர் ஹிட் படம் கொடுத்தவர் தான் இயக்குனர்..!

நடிகர், நடன இயக்குனர் மற்றும் இயக்குனர் ராகவா லாரன்ஸ் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தின் பட்ஜெட் 100 கோடி ரூபாய் என்றும் இந்த படத்தை சூப்பர் ஹிட் படம் எடுத்த இயக்குனர் இயக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.