ஐடி துறையில் கால் பதிக்கும் ஜிவி பிரகாஷ்!

  • IndiaGlitz, [Friday,February 01 2019]

ஜிவி பிரகாஷ் நடித்த 'சர்வம் தாளமயம்' இன்று வெளியாகி விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களின் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக ஜிவி பிரகாஷ் ஏற்று நடித்துள்ள வித்தியாசமான கேரக்டருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

அந்த வகையில் தற்போது ஜிவி பிரகாஷ் ஐடி துறையில் பணிபுரியும் ஊழியராக அடுத்த படத்தில் நடிக்கவுள்ளார். ஜிவி பிரகாஷ் நடிக்கும் புதிய படம் ஒன்றை கமல் பிரகாஷ் இயக்கவுள்ளதாகவும் இந்த படத்தின் பூஜை கடந்த மாதம் 21ஆம் தேதி நடைபெற்றது என்பதும் தெரிந்ததே. இந்த படம் ஒரு ஃபேண்டசி காமெடி படமாக உருவாகவிருப்பதாக படக்குழுவினர் ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தில் தான் ஒரு ஐடி துறை ஊழியராக நடிப்பதாக ஜிவி பிரகாஷ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஜிவி பிரகாஷ் ஜோடியாக முதல்முறையாக பிக்பாஸ் புகழ் ரைசா வில்சன் நடிக்கவுள்ளார். இந்த படத்தை ஆரா சினிமாஸ் தயாரிக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு இன்றுமுதல் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஆர்யா-சாயிஷா திருமண செய்தி வதந்தி! 'எங்க வீட்டு மாப்பிள்ளை' போட்டியாளர் திடுக் தகவல்

நடிகர் ஆர்யா, நடிகை சாயிஷாவை திருமணம் செய்து கொள்ளவிருப்பதாகவும் இருவீட்டார் சம்மதத்துடன் நடைபெறும் இந்த திருமணம் வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தன.

மத்திய பட்ஜெட்டில் திரையுலகினர்களுக்கான மிகபெரிய சலுகை

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை இன்று இடைக்கால நிதியமைச்சர் பியூஷ் கோயல் தாக்கல் செய்தார்.

மகனை அடுத்து மகள் செய்த சாதனை: தளபதி விஜய் பெருமிதம்

விஜய்யின் மகன் சஞ்சய் வெளிநாட்டு படிப்பு, குறும்படத்தில் நடிப்பது, பிரபலங்களை பேட்டி எடுப்பது என பிசியாக இருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் விஜய்யின் மகளும்

அமலாபாலுக்கு பிடித்த ஆண் உடை!

'பாஸ்கர் தி ராஸ்கல், 'ராட்சசன்' ஆகிய இரண்டு வெற்றிப்படங்களில் கடந்த ஆண்டு நடித்த நடிகை அமலாபால் தற்போது 'அதோ அந்த பறவை' மற்றும் 'ஆடை' என்ற இரண்டு தமிழ்ப்படங்களில் நடித்து வருகிறார்

ஒரு இரவுக்கு ஒரு கோடி ரூபாய்: நடிகைக்கு வந்த அதிர்ச்சி அழைப்பு

நடிகைகள் தங்களுடைய கவர்ச்சியான புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்வதும் இவற்றை பார்த்து ஒருசிலர் நடிகைகளை பணத்திற்காக அழைப்பதும் அவ்வப்போது நடந்து வரும் சம்பவங்களாக உள்ளது.