ஜி.வி.பிரகாஷின் 51வது படத்தின் சிங்கிள் பாடல் ரிலீஸ் தேதி

  • IndiaGlitz, [Wednesday,March 30 2016]
இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' படம்தான் இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் அவர்களுக்கு 50வது படம் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த படத்திற்காக ஜி.வி.பிரகாஷ் கம்போஸ் செய்த அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. இந்நிலையில் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்த 51வது படத்தின் சிங்கிள் பாடல் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி வெளியாகவுள்ளது.

மலையாளத்தில் சூப்பர் ஹிட் ஆன 'தட்டத்தின் மறயாது' என்ற படத்தின் தமிழ் ரீமேக் படமான 'மீண்டும் ஒரு காதல் கதை' என்ற படம்தான் ஜி.வி.பிரகாஷின் 51வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
கவுதம், இஷா தல்வார், அர்ஜூனன், சங்கிலி முருகன், தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை மித்ரன் ஜவஹர் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் போன்ற படங்களை இயக்கியவர். சங்கிலி முருகன் இந்த படத்தை தயாரித்துள்ளார்.