ஜிவி பிரகாஷின் 25வது படம்.. கமல்ஹாசன் வெளியிட்ட டைட்டில் போஸ்டர்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஜிவி பிரகாஷ் நடிக்க இருக்கும் 25 வது திரைப்படம் குறித்த தகவல் கடந்த சில நாட்களாக வெளிவந்து கொண்டிருந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் டைட்டில் போஸ்டரை உலகநாயகன் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். இந்த படத்திற்கு ’கிங்ஸ்டன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் ஜோடியாக பேச்சிலர் நடிகை திவ்யபாரதி நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் இன்று இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜிவி பிரகாஷின் 25 வது திரைப்படத்தை கமல் பிரகாஷ் என்பவர் இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே ஜிவி பிரகாஷ் நடித்த ’காதலிக்க யாருமில்லை’ என்ற படத்தை இயக்கி உள்ளார் என்பதும் இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கோகுல் பினாய் ஒளிப்பதிவில், சான் லோகேஷ் படத்தொகுப்பில், மூர்த்தி கலை இயக்கத்தில், திலீப் சுப்பராயன் ஸ்டண்ட் இயக்கத்தில் இந்த படம் உருவாக உள்ளது. இந்த படத்தை ஜிவி பிரகாஷ் மற்றும் ஜி ஸ்டுடியோ நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க உள்ளன என்பதும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் இந்த படம் உருவாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த படம் கப்பலில் நடக்கும் ஒரு ஆக்சன் கதையம்சம் கொண்டது என்றும் இதற்காக சென்னையில் உள்ள தனியா ஸ்டுடியோவில் கப்பல் செட் போடப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டது.
A dream voice from tamil cinema … it’s a team full of youngsters with only passion and love for cinema … here is my production’s first film #Kingston #GV25
— G.V.Prakash Kumar (@gvprakash) October 10, 2023
Thanks a lot @ikamalhaasan sir …#kingston @storyteller_kp @divyabarti2801 @gokulbenoy @dhilipaction @Sanlokesh… pic.twitter.com/XEha8DRzEa
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments