"எப்போடா கல்யாணம்"..?! என, அடிக்கடி கேட்டவரை போட்டுத்தள்ளிய 90's கிட்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
எப்போது கல்யாணம் செய்யப் போகிறாய்..?! என கேட்ட பக்கத்து வீட்டு பெண்ணை இளைஞர் கொலை செய்துள்ள சம்பவம் இந்தோனேஷியாவில் நடந்துள்ளது.
இந்தோனேஷியாவில் உள்ள காம்பங் பஷீர் ஜோங் பகுதியில் வசித்து வந்தவர் ஃபியாஸ் நூர்தீன். 28 வயதாகி திருமணம் ஆகாமல் இருந்துள்ளார். இவரது பக்கத்து வீட்டில் வசித்து வந்தவர் ஐஷியா. 32 வயதான இவர் அடிக்கடி நூர்தீனிடம் பேசுவது வழக்கமாக இருந்துள்ளது.
சம்பவம் நடந்த அன்று, உன் வயதை சேர்ந்தவர்களெல்லாம் திருமணம் முடித்துவிட்டு வாழும் போது உனக்கு ஏன் திருமணம் ஆகவில்லை என்று ஐஷியா கேட்டுள்ளார். ஏற்கனேவே வாழ்க்கை மீது வெறுப்பில் இருந்த நூர்தீன் இந்தக் கேள்வியால் மனதளவில் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
தான் இந்தக் கேள்வியால் மிகவும் அவனமாப்பட்டதாக நினைத்த நூர்தீன், ஐஷியா மீது கோபம் கொண்டுள்ளார். அவரது வீட்டுக்கு சென்று அவரது கழுத்தை நெரித்துள்ளார் அதை தடுக்கும் போராட்டத்தில் ஐஷியா, நூர்தீனின் விரலைக் கடித்துள்ளார். ஆனாலும் அவரை கொன்றுவிட்டு அங்கிருந்த கொஞ்சம் பணத்தையும் ஐஷியாவின் மொபைலையும் எடுத்துக்கொண்டு அந்த இடத்தைவிட்டு சென்று விட்டார்.
தகவல் அறிந்து வந்த போலீசார் நூருதீனை துரத்தி பிடித்தனர். இதில் நூர்தீனின் காலில் சுடப்பட்டுள்ளது. எதற்காக கொலை என்று போலீசார் விசாரிக்கும் போது தான் இந்தக் கதையை நூர்தீன் சொல்லியுள்ளார். சாதாரண கேலி கிண்டல் கொலையில் சென்று முடிந்திருப்பது இந்தோனேஷிய மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Yugan Surya
Contact at support@indiaglitz.com
Comments