'ஜோக்கர்' ரிலீஸ் தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Saturday,May 28 2016]

பிரபல பத்திரிகையாளர் ராஜூமுருகன் இயக்கிய முதல் படமான 'குக்கூ' நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அவர் இயக்கியுள்ள இரண்டாவது படமான 'ஜோக்கர்' படத்திற்கும் நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

அரசியல் த்ரில் படமாக அமைந்துள்ள இந்த படத்தின் டிரைலர், டீசர் ஆகியவை பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்த படம் வரும் ஜூன் 17-ல் ரிலீஸ் ஆகவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

குருசோமசுந்தரம், ரம்யா பாண்டியன், காயத்ரி கிருஷ்ணா, ராமசாமி, பாவா செல்லத்துரை, பாலமுருகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சீன் ரொல்டன் இசையமைத்துள்ளார். இவர் ஏற்கனவே சதுரங்க வேட்டை', முண்டாசுபட்டி உள்பட ஒருசில படங்களுக்கு இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு செழியன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.