ரிஷப ராசிக்கு குரு பெயர்ச்சி 2024-2025: திருமணம், அதிர்ஷ்டம், வேலை பற்றிய நம்பிக்கை தரும் தகவல்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னை: பிரபல ஜோதிடர் ஷெல்வி அவர்கள், ஆன்மீகக்ளிட்ஸ் யூடியூப் தளத்தில், குரு பெயர்ச்சி 2024 முதல் 2025 வரையிலான பலன்களைப் பற்றி விரிவாக விளக்கியுள்ளார். இதில், ரிஷப ராசிக்கான குறிப்பிட்ட பலன்கள் பார்வையாளர்களை கவர்ந்துள்ளன.
ரிஷப ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி காலத்தில் ஸ்ரீரங்கம் வழிபாடு செய்வது மிகவும் நன்மை தரும் என ஜோதிடர் ஷெல்வி கணித்துள்ளார். மேலும், விஷ்ணு சஹஸ்ரநாமம் முக்கியமாக செய்ய வேண்டும் என்றும் அவர் கூறுகிறார். வேலையில் சிறிய இடைஞ்சல்கள் சந்திக்க நேரிடும் என்றும், ஜாதக ரீதியாக எதிர்கொள்ள வேண்டிய வழிமுறைகள் பற்றியும் ஜோதிடர் ஷெல்வி விளக்குகிறார்.
திருமணம் கை கூடும் என்ற நம்பிக்கை தரும் தகவலை ஜோதிடர் ஷெல்வி தெரிவித்துள்ளார். திருமணத்தை ஏன் தவிர்க்கக்கூடாது என்பதற்கான காரணங்களையும் அவர் விளக்குகிறார். உறவுகளுக்கு இடையே இருந்த பிரச்சனைகள் தீர்ந்து, மன மகிழ்ச்சி ஏற்படும் என ஜோதிடர் ஷெல்வி கணித்துள்ளார்.
குடும்ப வாழ்க்கையில் ஏற்றம் காணப்படும். ராகு மேன்மை அடைய செய்வார் என ஜோதிடர் ஷெல்வி கணித்துள்ளார். லாட்டரி சீட்டு மூலம் எதிர்பாராத அதிர்ஷ்டம் கிடைக்கும் என்ற நம்பிக்கை தரும் தகவலையும் ஜோதிடர் ஷெல்வி தெரிவித்துள்ளார்.
மேலும், பொதுவான பலன்களாக மறுத்தவத்துறைலயில் புரட்சி, யுத்தம், பூகம்பம், நெருப்பால் பாதிப்பு, மழை வெள்ளம் போன்றவை ஏற்படும் என ஜோதிடர் ஷெல்வி கணித்துள்ளார். உலக அளவில் பிரச்சனைகள் அதிகரிக்கும். வரிகளை அரசாங்கம் அதிகமாக விதிக்கும். உலக போர் மூளும் அபாயம் ஏற்படும். தலைவர்கள், பிரபலமான நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், கார்ப்ரேட் சாமியார்கள், மடாதிபதிகள் அனைவரும் தங்கள் பாதுகாப்பை பலப்படுத்தி கொள்ள வேண்டும். தேக ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும் என ஜோதிடர் ஷெல்வி எச்சரிக்கிறார்.
ரிஷப ராசிக்கான முழு பலன்களையும், பரிகாரங்களையும் அறிய ஆன்மீகக்ளிட்ஸ் யூடியூப் தளத்தில் உள்ள வீடியோவை பார்க்குமாறு அவர் பார்வையாளர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் தகவல்களுக்கு இந்த வீடியோவை பார்க்கவும்👇👇👇
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout