மகர ராசிக்கு விடிவு காலம் பிறக்கிறது! கல்வி, காதல், திருமணம், பணம் என மகிழ்ச்சியே மயம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடப்பு ஆண்டு மே 1ம் தேதி மாற இருக்கும் குரு பெயர்ச்சி பற்றிய கணிப்புகளை பிரபல ஜோதிடர் ஆதித்ய குருஜி, ஆன்மீகக்ளிட்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்துள்ளார். இதில், மகர ராசி காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி கடந்த சில வருடங்களாக அனுபவித்து வந்த துன்பங்களில் இருந்து விடுதலை தரும் மகிழ்ச்சியான காலமாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, கடந்த ஐந்து வருடங்களாக ஏழரை சனியால் பாதிக்கப்பட்டிருந்த மகர ராசி காரர்களுக்கு, இந்த குரு பெயர்ச்சி 90% கஷ்டங்களை நீக்கி விடுதலை தரும் என்ற நம்பிக்கை அளிக்கும் செய்தியை ஜோதிடர் தெரிவித்துள்ளார். பிரச்சனைகள் தீர்ந்து, கஷ்டங்கள் விலகி, எல்லாவிதமான மாற்றங்களும் நன்மை தரக்க கூடிய இந்த காலத்தில் மாணவர்களுக்கு கல்வியில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.
இதுவரை காதலை தேடி அலைந்தவர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி காலத்தில் காதல் கிடைக்கும். காதலித்து வரும் ஜோடிகளுக்கு திருமண யோகம் வலுப்பெறும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், அண்ணன், தம்பி உறவில் ஒற்றுமையும் நிலவும். ஆரோக்கியம் சீராகும். பண விஷயத்தில் நல்ல லாபம் கிடைக்கும் என்கிறார் ஜோதிடர் ஆதித்ய குருஜி. குறிப்பாக, பெண்களுக்கு இந்த குரு பெயர்ச்சி காலம் மன நிம்மதியையும், நற்செய்திகளையும் தரும்.
மேலும் தகவல்களுக்கு இந்த வீடியோவை பார்க்கவும்👇👇👇
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Devan Karthik
Contact at support@indiaglitz.com
Comments