கும்ப ராசிக்கு mixed bag 2024-2025 குரு பெயர்ச்சி பலன்கள்! ஜென்ம சனியின் நிழலில் குரு பகவான்!

  • IndiaGlitz, [Thursday,April 25 2024]

நடப்பு ஆண்டு மே 1ம் தேதி மாற இருக்கும் குரு பெயர்ச்சி பற்றிய கணிப்புகளை பிரபல ஜோதிடர் ஆதித்ய குருஜி, ஆன்மீகக்ளிட்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்துள்ளார். இதில், கும்ப ராசி காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி காலம் கலவையான பலன்களைத் தரும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே ஜென்ம சனியின் பாதிப்பில் இருக்கும் கும்ப ராசி காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி பெரிய அளவில் நன்மைகளை செய்ய முடியாது என்கிறார் ஜோதிடர். 3ம் இடத்திலிருந்து 4ம் இடத்திற்கு பெயர்ச்சி பெறும் குரு பகவான், குறிப்பிடத்தக்க மாற்றங்களைத் தர வாய்ப்பில்லை. குறிப்பாக, சதயம் நட்சத்திரத்தைச் சேர்ந்த கும்ப ராசி காரர்கள் மன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இது அவர்களுக்கு ஒரு சோதனை காலமாக இருக்கும்.

அவிட்டம் நட்சத்திரத்தைச் சேர்ந்த கும்ப ராசி ஜாதகருக்கு இந்த காலம் சற்று சாதகமாக இருக்கும் என்றாலும், ஜென்ம சனியின் தாக்கம் காரணமாக குழப்பமும், மன உளைச்சலும் ஏற்படலாம். நண்பர்கள், உறவினர்கள் விலகிச் செல்லும் சூழல் உருவாகலாம். கடன் தொல்லை அதிகரிக்கக் கூடும்.

இருப்பினும், 50 வயதுக்கு மேற்பட்ட கும்ப ராசி காரர்களுக்கு இந்த ஜென்ம சனி பாதிப்பு இரண்டாம் தடவை என்பதால், அவர்களுக்கு குறைவான தாக்கமே இருக்கும் என்கிறார் ஜோதிடர் ஆதித்ய குருஜி.

அடுத்த ஆண்டில், அதாவது 2025ல், கும்ப ராசி காரர்களுக்கு சில சவால்கள் காத்திருக்கின்றன. சோம்பல், மனக்குழப்பம் போன்றவை ஏற்படலாம். இந்த குரு பெயர்ச்சி காலத்தில் மிகப்பெரிய மாற்றங்கள் எதையும் எதிர்பார்க்க முடியாது என்றாலும், கும்ப ராசி காரர்கள் முயற்சி செய்து கடினமாக உழைத்தால் நிச்சயம் வெற்றி பெறலாம்.

மேலும் தகவல்களுக்கு இந்த வீடியோவை பார்க்கவும்👇👇👇