கண்ணீர் துடைத்து, மகிழ்ச்சி பூக்கும் காலம் - விருச்சிக ராசிக்கு 2024-2025 குரு பெயர்ச்சி பலன்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடப்பு ஆண்டு மே 1ம் தேதி மாற இருக்கும் குரு பெயர்ச்சி பற்றிய கணிப்புகளை பிரபல ஜோதிடர் ஆதித்ய குருஜி, ஆன்மீகக்ளிட்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்துள்ளார். இதில், விருச்சிக ராசி காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி மிகவும் சாதகமான பலன்களைத் தரும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை சவால்களைச் சந்தித்து வந்த விருச்சிக ராசி காரர்களுக்கு இனி கண்ணீர் துடைத்து மகிழ்ச்சி பூக்கும் காலம் பிறக்கிறது என்கிறார் ஜோதிடர். வெற்றி, லாபம், புகழ் என அனைத்தும் விருச்சிக ராசி காரர்களைத் தேடி வரும் ஆண்டாக இது இருக்கும். ஏற்கனவே தவற விட்ட வாய்ப்புகள் கூட மீண்டும் கிடைக்கும் என்பது கூடுதல் மகிழ்ச்சியை அளிக்கிறது.
விளையாட்டுத்தனமாக பேசும் பேச்சுக்கள் கூட இவர்களுக்கு வெற்றியை தரும் அதிர்ஷ்டம் இந்த ஆண்டு உண்டு. குடும்ப வாழ்க்கையிலும் மகிழ்ச்சி நிலவும். பெண்களுக்கு ஆண்களாலும், ஆண்களுக்கு பெண்களாலும் நன்மைகள் கிடைக்கும். தொழில் துறையில் வெற்றி கிடைக்கும். நீதிமன்ற வழக்குகளில் வெற்றி பெற வாய்ப்பு உண்டு.
அதிர்ஷ்டம் கை கூடி வரும் இந்த ஆண்டு மட்டுமல்லாமல், அடுத்த இரண்டு, மூன்று வருடங்களும் விருச்சிக ராசி காரர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும் என ஜோதிடர் ஆதித்ய குருஜி அவர்கள் கணித்துள்ளார்.
மேலும் தகவல்களுக்கு இந்த வீடியோவை பார்க்கவும்👇👇👇
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Devan Karthik
Contact at support@indiaglitz.com