மிதுன ராசிக்கு லாபம் தரும், கனவுகள் நிறைவேறும் 2024-2025 குரு பெயர்ச்சி பலன்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
2024 மே 1ம் தேதி மாற இருக்கும் குரு பெயர்ச்சி பற்றிய கணிப்புகளை பிரபல ஜோதிடர் ஆதித்ய குருஜி ஆன்மீகக்ளிட்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில் குறிப்பாக மிதுன ராசிக்கான 2024-2025 ஆண்டின் குரு பெயர்ச்சி பலன்களை விரிவாக விளக்குகிறார்.
மிதுன ராசி காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி கலவையை விட மகிழ்ச்சியை தரும் என்று ஜோதிடர் குறிப்பிடுகிறார். லாப ஸ்தானத்திலிருந்து விரைய ஸ்தானத்திற்கு குரு பெயர்ச்சி நடப்பது செலவுகளை அதிகரிக்கும் என்ற அச்சம் தேவையில்லை என்கிறார். இந்த செலவுகள் அனைத்தும் நல்ல செலவுகளாக இருக்கும். வீடு, மனை வாங்குவது போன்ற நீண்டநாள் கனவுகள் இந்த ஆண்டு நிறைவேற வாய்ப்பு உள்ளது.
வெளிநாடு செல்ல வேண்டும் என்ற ஆசை கொண்டிருக்கும் மிதுன ராசி காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி நற்செய்தி தரும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு இவர்களுக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது. அஷ்ட சனி காலத்தில் இழந்த பணத்தை மீண்டும் பெறவும் வாய்ப்பு உள்ளது. தொழில் துறையில் மஞ்சள் நிறம் சார்ந்த தொழிலில் இருப்பவர்கள், ஆசிரியர்கள், வக்கீல்கள் போன்றவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். செலவு அதிகரித்தாலும், அதற்கேற்ப பணவரவும் அதிகரிக்கும் என ஜோதிடர் கூறுகிறார்.
மிதுன ராசிக்கான முழுமையான குரு பெயர்ச்சி பலன்களை அறிய ஆன்மீகக்ளிட்ஸ் யூடியூப் சேனலில் உள்ள ஜோதிடர் ஆதித்ய குருஜி அவர்களின் பேட்டியை காணலாம்.
மேலும் தகவல்களுக்கு இந்த வீடியோவை பார்க்கவும்👇👇👇
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Devan Karthik
Contact at support@indiaglitz.com
Comments