கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் மீது குண்டர் சட்டம்: காவல்துறை அதிரடி நடவடிக்கை
- IndiaGlitz, [Monday,July 27 2020]
கந்த சஷ்டி கவசம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் வீடியோ வெளியிட்ட கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் மீது நடவடிக்கை எடுக்க முருக பக்தர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து பதிவு செய்யப்பட்ட புகாரின் அடிப்படையில் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் நிர்வாகி சுரேந்திரன் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டனர் என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் உள்ள 500 வீடியோக்களை சைபர் கிரைம் போலீசார் நீக்கினார்கள் என்பதும் இந்த சேனலை தடைசெய்ய யூடியூப் நிர்வாகத்தின் தலைமை அலுவலகத்திலிருந்து கடிதம் எழுதியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சமீபத்தில் கறுப்பர் கூட்டம் சேனலின் நிர்வாகி சுரேந்திரனை போலீசார் காவலில் எடுத்து விசாரணை செய்து வந்தனர், இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளதாக காவல்துறை வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின் அடிப்படையில் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலின் சுரேந்திரன் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. சென்னை மாநகர் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். கந்தசஷ்டி விவகாரத்தில் 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் இருக்கும் சுரேந்திரன் மீது தற்போது குண்டர் சட்டமும் பாய்ந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.