'குணா - மஞ்சும்மெல் பாய்ஸ்' படமும் 33 ஆண்டுகளும்..! என்ன ஒரு ஒற்றுமை..!

  • IndiaGlitz, [Saturday,March 09 2024]

சமீபத்தில் வெளியான 'மஞ்சும்மெல் பாய்ஸ்’ என்ற மலையாள திரைப்படம் 100 கோடி ரூபாயை தாண்டி வசூலை அள்ளி வருகிறது என்பதும் மிக குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த படம் பல மடங்கு லாபத்தை சம்பாதித்து கொடுத்திருப்பது திரை உலகினர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

’மஞ்சும்மெல் பாய்ஸ்’ படம் தெலுங்கிலும் டப்பிங் செய்யப்பட்டு விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளது என்றும் ஹிந்தியிலும் ரீமேக் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. மொத்தத்தில் இந்த படத்தின் வசூல் மலையாள திரை உலகம் இதுவரை கண்டிராத வசூலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் ’மஞ்சும்மெல் பாய்ஸ்’ இயக்குனர் சிதம்பரம் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த போது ’குணா’ மற்றும் ’மஞ்சும்மெல் பாய்ஸ்’ படங்களுக்கும் 33 ஆண்டுகள் என்பதற்கும் உள்ள ஆச்சரிய ஒற்றுமை குறித்து கூறியுள்ளார்.

’குணா’ திரைப்படத்தில் கமல்ஹாசன் நடிக்கும் போது அவருக்கு வயது 33 என்றும் தற்போது 'மஞ்சும்மெல் பாய்ஸ்’ படத்தை இயக்கியிருக்கும் தனக்கும் வயது 33 என்றும் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி ’குணா’ படம் வெளியாகி சரியாக 33 ஆண்டுகள் கழித்து 'மஞ்சும்மெல் பாய்ஸ்’ படம் வெளியாகியுள்ளது என்றும், இது ஒரு அதிசயமான ஆச்சரியமான ஒற்றுமை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

33 ஆண்டுகளுக்கும் ’குணா’ 'மஞ்சும்மெல் பாய்ஸ்' படங்களுக்கும் உள்ள 33 ஆண்டுகள் ஒற்றுமையை கேள்விப்பட்டு ரசிகர்கள் மீண்டும் ஆச்சரியம் அடைந்து வருகின்றனர்.