துப்பாக்கிக் காட்டி லைவ் நிகழ்ச்சியில் கொள்ளை? வைரல் வீடியோ!

  • IndiaGlitz, [Tuesday,February 23 2021]

வங்கிக் கொள்ளைகளில் துப்பாக்கி பயன்படுத்தப் படுவதைப் பார்த்து இருப்போம். ஆனால் முதல் முறையாக தென் அமெரிக்காவில் தொலைக்காட்சி ஒன்றிற்காக எடுக்கப்பட்ட லைவ் நிகழ்ச்சியில் துப்பாக்கி காட்டி கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தென் அமெரிக்கா நாடான ஈக்வடாரில் Sky News எனும் விளையாட்டு நிகழ்ச்சிகளை வழங்கும் தொலைக்காட்சி செயல்பட்டு வருகிறது. இந்தத் தொலைக்காட்சியின் நிரூபர் டியாகோ ஓர்டினோலா என்பவர் கடந்த 19 ஆம் தேதி தனது கேமரா குழுவோடு சேர்ந்து குவாயாகி எனும் பகுதிக்கு அருகே உள்ள Esadia monument எனும் விளையாட்டு அரங்கத்தைக் காட்டி எதோ ஒரு தகவலை மும்முரமாக சொல்லிக் கொண்டு இருந்தார். அந்த நேரத்தில் முகக்கவசம் அணிந்த ஒரு மர்ம நபர் துப்பாக்கி எடுத்துக் கொண்டு நிரூபரைக் காட்டி மிரட்டுகிறார்.

முக்கத்துக்கு அருகே துப்பாக்கி இருப்பதை பார்த்த நிரூபர், மைக்கைக் நீட்டி அதிர்ச்சியை வெளிப்படுத்தினார். இதனால் பக்கத்தில் இருந்த கேமரா குழுவிடம் பாய்ந்த கொள்ளையன் உங்களிடம் இருக்கும் செல்போன் அல்லது பணத்தைக் கொடுங்கள் என மிரட்டுகிறார். இதனால் பயந்து போன கேமராமேன் ஒரு செல்போனை கொடுக்கிறார். அதை வாங்கிக் கொண்ட கொள்ளையன் இருசக்கர வாகனத்தில் வந்த மற்றொருவருடன் தப்பித்துச் சென்றுவிட்டார். இந்தக் காட்சிகள் அனைத்தும் தற்போது லைவ் நிகழ்ச்சியில் பதிவாகி இருப்பதோடு அது சமூக வலைத்தளத்தில் வைரலாகியும் வருகிறது.

More News

இணையத்தில் வைரலாகும் தேவயானி மகள் புகைப்படம்!

அஜித் நடித்த 'காதல் கோட்டை' விஜய் நடித்த 'நினைத்தேன் வந்தாய்' மற்றும் 'ப்ரெண்ட்ஸ்', கமல்ஹாசன் நடித்த 'தெனாலி' விஜயகாந்த் நடித்த 'வல்லரசு' உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் தேவயானி

ஆல்யா மானஸாவுடன் ரொமான்ஸ் செய்த நடிகரை கன்னத்தில் அடித்த சஞ்சீவ்: வீடியோ வைரல்!

'ராஜா ராணி' தொடரில் நடித்த ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் ஆகிய இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர் என்பதும் இந்த நட்சத்திர தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது என்பதும் தெரிந்ததே 

'த்ரிஷ்யம் 2' படத்தை தன்னுடைய படத்துடன் ஒப்பிட்ட 'தமிழ்ப்படம்' இயக்குனர்

சமீபத்தில் வெளியான மோகன்லால் மற்றும் ஜீத்து ஜோசப்பின் 'த்ரிஷ்யம் 2'திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தை தமிழ் உள்பட அனைத்து மொழிகளிலும் ரீமேக் செய்ய ஏற்பாடுகள்

பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட முதல் மனிதன்? பகீர் ஏற்படுத்தும் அதிர்ச்சி தகவல்!

இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் முதலே பறவைகளை குறி வைத்துத் தாக்கும் ஏவியன் இன்ஃப்ளூயன்சா வைரஸ் (H5N8) பரவி வருகிறது.

தேசிய அளவில் டிரெண்டான அட்லி: விஜய் காரணமா?

இன்று காலை முதல் டுவிட்டரில் திடீரென அட்லியின் பெயர் தேசிய அளவில் டிரெண்ட் ஆனது