பெங்களூரில் ஏ.டி.எம் பணத்துடன் காணாமல் போன வேன் கண்டுபிடிப்பு

  • IndiaGlitz, [Thursday,November 24 2016]

நேற்று பெங்களூரில் உள்ள கே.ஜி. சாலையில் உள்ள பேங்க் ஆப் இந்தியா ஏ.டி.எம்-க்கு பணம் நிரப்ப வந்த வேன் ரூ.1.37 கோடியுடன் மாயமாய் மறைந்த செய்தியை பார்த்தோம். இந்நிலையில் இன்று காணாமல் போன வேனை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். தலைமறைவாகியுள்ள டிரைவரை பிடிக்க போலீஸார் தகுந்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
நேற்று காணாமல் போன வேன், பெங்களூருவில் உள்ள வசந்த் நகர் என்ற பகுதியில் நிற்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலை அடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று வேனை கைப்பற்றினர். அந்த வேனில் ரூ 45 லட்சமும், துப்பாக்கியும் இருந்ததாக போலீசார் தரப்பில் கூறியுள்ளனர். இந்த பணம் முழுவதும் புதிய ரூ.2000 நோட்டு என்பது குறிப்பிடத்தக்கது.
மீதிப் பணமான ரூ.92 லட்சத்துடன் டிரைவர் தலைமறைவாகியுள்ளதால், டிரைவரை பிடிக்க போலீஸார் தீவிர வேட்டையில் இறங்கியுள்ளனர்.

More News

ரூ.500, ரூ.1000-க்கு இன்று கடைசி நாள். சுதாரித்து கொள்ளுங்கள் மக்களே

பாரத பிரதமர் நரேந்திரமோடி கடந்த 8ஆம் தேதி ரூ.500 மற்றும் ரூ.1000 செல்லாது என்று அதிரடியாக அறிவித்தார்...

மீண்டும் ஒருமுறை விஜய்யுடன் மோதும் விஷால்

விஷால், தமன்னா நடிப்பில் சுராஜ் இயக்கிய 'கத்திச்சண்டை' திரைப்படம் ஏற்கனவே நவம்பர் 18ஆம் தேதி...

சன்னிலியோனின் புதிய அவதாரம். இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்

கனடாவை சேர்ந்த பிரபல கவர்ச்சி நடிகை சன்னிலியோன் கடந்த 2012ஆம் ஆண்டு பாலிவுட்டில் 'ஜிஸ்ஸம் 2' ...

இந்தியாவின் முதல் பேமெண்ட் வங்கி. ஏர்டெல் தொடங்கியுள்ளது

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றாகிய ஏர்டெல் நிறுவனம் இந்தியாவின்...

ரஜினி-விஜய்யை முந்திய சிவகார்த்திகேயன் - விஜய்சேதுபதி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இளையதளபதி விஜய் ஆகியோர் கோடிக்கணக்கான ரசிகர்களை வைத்திருந்தபோதிலும் அவர்களுடைய பாடல்களுக்கு யூடியூபில் கிடைத்த பார்வையாளர்களைவிட கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அறிமுகமான சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி ஆகியோர்களின் பாடல்களுக்கு அதிக பார்வையாளர்கள் வந்துள்ளனர் என்பது தெரிய வந்துள்