குஜராத் தேர்தல் வெற்றி நாயகனுடன் பா.ரஞ்சித் சந்திப்பு

  • IndiaGlitz, [Monday,January 15 2018]

சமீபத்தில் நடைபெற்ற குஜராத் மாநில தேர்தலில் பிரதமர் மோடி மற்றும் பாஜக அலையையும் மீறி சுயேட்சையாக வெற்றி பெற்றவர் ஜிக்னேஷ்.  34 வயதான 'ஜிக்னேஷ் மேவானி' என்ற இளைஞர். 'ராஷ்ட்ரிய தலித் அதிகார் மன்ச்' என்ற அமைப்பை நடத்திவருகிறார். குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில், பனஸ்கந்தா மாவட்டத்தின் வட்காம் தனித் தொகுதியில் இவர் பெற்ற வெற்றி சமகால அரசியலில் மிக முக்கியமான வெற்றி. பா.ஜ.க வேட்பாளருடன் நேரடியாக போட்டியிட்ட ஜிக்னேஷ், கிட்டத்தட்ட 20 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். தொடர்ந்து ஒடுக்கப்பட்ட சிறுபான்மையினரின் மீது தாக்குதல் நடந்துவரும் காலகட்டத்தில், மோடியின் கோட்டையாக கூறப்படும் குஜராத்தில், சுயேச்சையாக ஜிக்னேஷ் வெற்றி பெற்றதை இந்தியாவே திரும்பி பார்த்தது.

இந்த நிலையில் ஜிக்னேஷ் எம்.எல்.ஏ நேற்று 'கபாலி' பட இயக்குனர் பா.ரஞ்சித்தை சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்து ஜிக்னேஷ் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'சூப்பர் டூப்பர் ஹிட் படமான 'கபாலி' படத்தை இயக்கிய ரஞ்சித்தை சந்தித்தேன். அவருடனான இந்த சந்திப்பு மிக அருமையானது. மிக அன்பான மனிதரான அவருடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடினேன்' என்று தெரிவித்துள்ளார்.

இதுவொரு எதிர்பாராத, அன்பான சந்திப்பு என்றும், அவருடைய சிறப்பான பணிகளுக்கும், ஒற்றுமைக்கு செய்யும் விடாமுயற்சி அபாரமானது. அவரது பணி மேலும் சிறக்க எனது வாழ்த்துக்கள்' என்று இயக்குனர் ரஞ்சித் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.