காவல்துறையில் முதல் லெஸ்பியன் ஜோடி: நீதிமன்றம் சென்று உரிமையை நிலையாட்டிய இளம்பெண்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
குஜராத் காவல் துறையை சேர்ந்த இரண்டு பெண்கள் தங்களை லெஸ்பியன் என்று அறிவித்துக்கொண்டதோடு அதை நீதிமன்றத்திலும் சென்று அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 24 வயதுடைய இரண்டு இளம் பெண்கள் காவல் துறையில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் இருவரும் ஒரே வீட்டில் தங்கியிருந்து பணி புரிந்த நிலையில் இருவருக்கும் இடையே நட்பு அதிகமாகி ஒரு கட்டத்தில் காதல் ஏற்பட்டது. காவல் துறையில் உள்ளவர்களுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் இந்த விஷயம் தெரிய வந்ததை அடுத்து அவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது
இந்த நிலையில் இரு தரப்பின் பெற்றோர்களும் லெஸ்பியன் வாழ்க்கை தவறானது என்றும் அதனால் காவல்துறை வேலையை விட்டு விட்டு வீட்டுக்கு வந்துவிடுமாறு வலியுறுத்தினர். ஆனால் இதனை இருவரும் கேட்கவில்லை. இதனையடுத்து பெற்றோர்கள் தொடர்ந்து இதுகுறித்து வலியுறுத்தியதை அடுத்து தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் காவல்துறை கண்காணிப்பாளரிடம் இருவரும் கூறினார்கள். ஆனால் அதற்கு உயரதிகாரிகளிடம் இருந்து சரியான பதில் இல்லை
இதனையடுத்து இருவரும் குஜராத் நீதிமன்றத்தை நாடினார்கள். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி இதுகுறித்து காவல்துறை கண்காணிப்பாளர் தலையிட்டு தேவையான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டார். இந்த நிலையில் காவல்துறை கண்காணிப்பாளர் இந்த இருவர் குறித்து நீதிமன்றத்தில் கூறியபோது, ‘இரண்டு காவலர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து தங்களுக்கு கவலை இல்லை என்றும் பணியின் போது எப்படி இருக்கிறார்கள் என்பது மட்டுமே தாங்கள் கவனிக்க முடியும் என்றும் கூறியுள்ளார். இதனை அடுத்து இந்த காதல் ஜோடிக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை என்பது உறுதியானது
குஜராத் மாநிலத்தின் முதல் லெஸ்பியன் ஜோடி என்று தங்களைத் தாங்களே இருவரும் அறிவித்துக் கொண்டு தற்போது இருவரும் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout