பாலியல் தொழிலை விருப்பத்துடன் செய்தால் தவறில்லை. குஜராத் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
- IndiaGlitz, [Saturday,May 06 2017]
பாலியல் தொழில் செய்ய பெண்கள் கட்டாயப்படுத்தப்பட்டால் மட்டுமே அது தவறு என்றும், ஒரு பெண் விரும்பியே பாலியல் தொழில் செய்தால் அது தவறு இல்லை என்றும், அவ்வாறு விரும்பி பாலியல் தொழில் செய்யும் பெண்ணையும் அவரது வாடிக்கையாளர்களையும் போலீசார் கைது செய்ய கூடாது என்றும் குஜராத் ஐகோர்ட் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
குஜராத் மாநிலம் சூரத் பகுதியில் சமீபத்தில் பாலியல் தொழில் செய்யும் விடுதி ஒன்றில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது பாலியல் தொழிலாளிகள், வாடிக்கையாளர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் வினோத் என்ற நபர் பாலியல் தொழிலாளியின் விருப்பத்தின் பேரிலே அங்கு தான் சென்றதாகவும், இது எப்படி குற்றமாகும் என்றும் குஜராத் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் ஒரு பெண் விரும்பி பாலியல் தொழில் செய்தால் அது குற்றமில்லை என்று கூறி வினோத் மற்றும் பாலியல் தொழில் செய்த பெண் ஆகியோரை விடுதலை செய்ய உத்தரவிட்டனர். இந்த உத்தரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.