இந்தியா வரும் டிரம்ப்.. குடிசை பகுதிகளை மறைக்க 7 அடியில் சுவர் கட்டும் பாஜக அரசு..!

  • IndiaGlitz, [Friday,February 14 2020]

அமெரிக்கா அதிபர் டொனால்டு ட்ரம்ப், அவரது மனைவியுடன் இணைந்து இரண்டு நாள் அரசுமுறை பயணமாக பிப்ரவரி 24, 25-ம் தேதிகளில் இந்தியாவுக்கு வருகை தரவுள்ளார். இரண்டு நாள்களும் குஜராத் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லவுள்ளார்.

அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பதற்கு குஜராத் மாநில அரசும், இந்திய அரசும் தயாராகிவருகிறது. இந்தநிலையில், குஜராத்தின் அகமதாபாத் மாவட்டத்திலுள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமானநிலையத்துக்கு அருகிலுள்ள குடிசைவாரிய குடியிருப்புகளை மறைக்கும் வகையில் ஏழு அடி உயரத்துக்கு அரைகிலோ மீட்டர் தூரத்துக்கு சுவர் ஒன்றை அகமதாபாத் மாநகராட்சி கட்டிவருகிறது.

அகமதாபாத்திலிருந்து காந்திநகர் நோக்கி செல்லும் திசையில் சுவர் கட்டப்பட்டுள்ளது. அந்த குடிசைவாரியக் குடியிருப்பில் பத்துவருடங்களுக்கும் மேலாக 500 வீடுகளில் 2,500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்துவருகின்றனர். மக்களின் ஏழ்மை நிலையை ட்ரம்ப் பார்க்கக் கூடாது என்பதற்காக இந்தச் சுவர் கட்டப்படுகிறது. இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

More News

டிக் டாக் வீடியோ.. ஒட்டுமொத்தமாக போய் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்த கிராமம்..!

டிக்டாக் வீடியோவால், தேனி பி.சி.பட்டி காவல் நிலையத்திற்கு கிராம பெண்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் திரண்டுவந்து புகார் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

2 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று; ஜப்பானில் தனிமைப் படுத்தபட்ட கப்பல், நிலைமை என்ன???

ஜப்பான்- யோகோஹோமா துறைமுகத்தில் தனிமைப் படுத்தப் பட்ட “டைமண்ட் பிரின்சஸ்” சொகுசு கப்பலில் பயணம் செய்த 2 இந்தியருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு

'மாஸ்டர்' தயாரிப்பாளரின் அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு!

தளபதி விஜய் நடித்து வரும் மாஸ்டர் திரைப்படத்தை விஜய்யின் நெருங்கிய உறவினரான ஜான் பிரிட்டோ என்பவர் தயாரித்து வருவதாக கூறப்பட்டாலும்,

முத்தம் கொடுப்பதில் சிறந்தவர் யார்?- மகத் மனைவி பேட்டி

பிக்பாஸ் புகழ் மதத்துக்கும் நடிகை பிராய்ச்சிக்கும் கடந்த 1ஆம் தேதி திருமணம் நடைபெற்றது என்பதும் இந்த திருமணத்தில் மகத்தின் நெருங்கிய நண்பரும் நடிகருமான

காதலர் தினம்: பெண்கள் கல்லூரியின் அலர்ட் மெசேஜ்

இன்று உலகம் முழுவதும் காதலர் தினம் காதலர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றைய தினம் கல்லூரி நேரம் முடிந்தவுடன் பல மாணவர்கள் மற்றும் மாணவிகள்