சொகுசு விடுதியில் கைதுசெய்யப்பட்ட பாஜக எம்எல்ஏ… பரபரப்பு பின்னணி!

  • IndiaGlitz, [Saturday,July 03 2021]

குஜராத் மாநிலத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்ட பாஜக எம்எல்ஏ கேசரிசின் சிங் சோலங்கி என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார். மேலும் அந்த சொகுசு விடுதியில் இருந்த 25 பேர் கைது செய்யப்பட்டதாகவும் அவர்களில் 7 பேர் பெண்கள் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.

குஜராத் மாநிலம் கெடா மாவட்டத்தில் உள்ள மாடர் எனும் சட்டசபை தொகுதிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏ கேசரிசின் சிங் சோலங்கி கடந்த வியாழக்கிழமை அன்று ஒரு சொகுசு விடுதியில் இருந்தபோது கைது செய்யப்பட்டு உள்ளார். இவர் அந்த விடுதியில் தடைசெய்யப்பட்ட சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும் மேலும் அங்கிருந்தவர்களுடன் சேர்ந்து மது விருந்து நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

பஞ்ச்மஹால் காவல் நிலையத்திற்கு உட்பட்ட சொகுசு பங்களாவில் மது விருந்து மற்றும் சூதாட்டம் நடப்பதாக வந்த தகவலை அடுத்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து 6 லட்சம் பணம் மற்றும் 8 கோடி மதிப்புள்ள 8 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

More News

திருமணத்திற்குப் பிறகு நடிகை பிரணிதா வெளியிட்ட க்யூட் வீடியோ… வைரல்!

தமிழில் நடிகர் அருள்நிதி நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான “உதயன்” எனும் திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை பிரணிதா சுபாஷ். பின்பு நடிகர் கார்த்தியுடன் “சகுனி”,

சினிமா குரல் வளையை நெறிக்கும் புது சட்டம்… பதறும் சினிமா பிரபலங்கள்!

மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஏற்கனவே இருக்கும் சினிமா ஒளிப்பதிவு சட்டத்தில் (1952) சில மாற்றங்களை கொண்டு வர நினைக்கிறது.

6வது திருமண நாளை கொண்டாடிய 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' குமரன்: அழகிய புகைப்படங்கள்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல தொலைக்காட்சி தொடர்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் 'பாண்டியன் ஸ்டோர்' தொடர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பது தெரிந்ததே.

யாரை நம்புவது என்றே தெரியவில்லை: ஐஸ்வர்யா ராஜேஷின் அதிர்ச்சி பேட்டி!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னுடன் இருப்பவர்களே தனக்கு துரோகம் செய்வதாகவும் யாரை நம்புவது என்றே தெரியவில்லை என்றும் பேட்டி

கணவர் மீது மீண்டும் புகாரளித்த 'சுந்தரா டிராவல்ஸ்' நடிகை!

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சுந்தரா டிராவல்ஸ் படத்தில் நடித்த நடிகை ராதா தனது கணவர் மீது புகார் அளித்தார் என்பதும் அதன் பின்னர் காவல்துறையினர் இருவரையும் சமாதானம் செய்து வைத்தனர்