ரூ.18 ஆயிரம் அபராதம்: தற்கொலைக்கு முயன்ற ஆட்டோ டிரைவர்

  • IndiaGlitz, [Saturday,September 28 2019]

மோட்டார் வாகன புதிய சட்டத்தின்படி போக்குவரத்து சாலை விதிகளை மீறுவோருக்கும், முறையான ஆவணங்கள் இல்லாத வாகன ஓட்டிகளுக்கும் பெரிய தொகை அபராதம் விதிக்கப்பட்டு வருவது தெரிந்ததே. சிலசமயம் வாகனத்தின் விலையைவிட அபராத தொகை அதிகமாக இருப்பதை கண்டு வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர் 

இந்த நிலையில் குஜராத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவருக்கு போக்குவரத்து துறை காவலர்கள் சரியான ஆவணங்கள் இல்லாததால் ரூபாய் 18 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர். இந்த அபராதத்திஅ அந்த ஏழை ஆட்டோ டிரைவரால் கட்ட முடியவில்லை என்பதால் அவருடைய ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது. இதனை அடுத்து மனமுடைந்த அந்த ஆட்டோ டிரைவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். தற்போது அவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் 

பிகாம் பட்டதாரியான அந்த ஆட்டோ ஓட்டுனர் வேறு எந்த வேலையும் கிடைக்காததால் ஆட்டோ ஓட்டி வந்ததாகவும், இந்த ஆட்டோ இல்லை என்றால் தன்னால் வாழ்நாள் வாழ்நாளை ஓட்ட முடியாது என்றும் ரூபாய் 18 ஆயிரம் அபராதம் கட்டும் அளவுக்கு தன்னிடம் பணம் இல்லை என்றும் சிகிச்சை பெற்று வரும் அந்த ஆட்டோ ஓட்டுனர் தெரிவித்துள்ளார்.