40 ஆண்டுகளுக்கு பின் சகுந்தலாதேவிக்கு கிடைத்த கின்னஸ் சான்றிதழ்: அஜித் பட நடிகை எடுத்த முயற்சி
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியாவைச் சேர்ந்த கணித மேதை சகுந்தலாதேவி அவர்களுக்கு நாற்பது ஆண்டுகளுக்கு முன் கின்னஸ் சாதனை அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்கான சான்றிதழ் தற்போது தான் கிடைத்துள்ளது என்பதும் அதற்கு அஜித் பட நடிகை ஒரு காரணம் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன
உலகத்திலேயே மிக வேகமாக கணிதம் செய்யும் திறமை கொண்டவர் சகுந்தலா தேவி. இவர் கடந்த 1980ஆம் ஆண்டு லண்டனில் நடந்த ஒரு கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பார்வையாளர்கள் கொடுத்த 13 இலக்க எண்கள் இரண்டை 28 விநாடிகளில் பெருக்கி விடை அளித்து அனைவரையும் அசத்தினார். இது கின்னஸ் சாதனையாக அறிவிக்கப்பட்டது.
இருப்பினும் கடந்த 40 ஆண்டுகளாக அறிவிக்கப்பட்ட இந்த சாதனைக்கான சான்றிதழ் கின்னஸ் நிறுவனத்திடமிருந்து கிடைக்கவில்லை. இந்த நிலையில் கணித மேதை சகுந்தலா தேவி வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த நடிகை வித்யாபாலன் இந்த படத்தின் படப்பிடிப்புக்காக லண்டன் சென்றபோது கின்னஸ் நிறுவனத்திடம் இது குறித்து பேசினார். அவருடைய முயற்சியின் அடிப்படையில் தற்போது சகுந்தலா தேவியின் மகளுக்கு கின்னஸ் சாதனை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது
40 ஆண்டுகள் கழித்து தனது தாயார் சகுந்தலாதேவியின் சாதனைக்கான கின்னஸ் சான்றிதழை பெற்றுக் கொள்வதில் தனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்றும் இதற்கான முயற்சி எடுத்த நடிகை வித்யா பாலனுக்கு தனது நன்றி என்றும் சகுந்தலா தேவியின் மகள் தெரிவித்துள்ளார்
இந்த நிலையில் கணித மேதை சகுந்தலா தேவியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ‘சகுந்தலா தேவி’ என்ற திரைப்படம் இன்று ஒடிடி பிளாட்பாரத்தில் வெளியாகி உள்ளது என்பதும் ரசிகர்கள் இந்த படத்தை பார்த்து பாராட்டி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. நடிகை வித்யாபாலன், அஜித் நடித்த ’நேர்கொண்ட பார்வை’ என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
She is here!!
— vidya balan (@vidya_balan) July 30, 2020
Meet #ShakuntalaDeviOnPrime now!!!@PrimeVideoIN#FirstDayFirstStream@sanyamalhotra07 @Jisshusengupta @TheAmitSadh @anumenon1805 @sonypicsprodns @vikramix @Abundantia_Ent @ShikhaaSharma03 pic.twitter.com/hzjfJRKhkk
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments