99 வயதில் விமானம் ஓட்டி, கின்னஸ் சாதனை படைத்த பாட்டி!!! குவியும் பாராட்டு!!!

  • IndiaGlitz, [Friday,July 31 2020]

 

உலகிலேயே அதிக வயதில் விமானம் இயக்கி கின்னஸ் சாதனைக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த ரோபினா ஆஸ்தி. இவர் கலிபோர்னியா மாகணத்தில் உள்ள ரிவர்சைட் பகுதியில் பல ஆண்டுகளாக விமான ஓட்டுநர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார். தன்னுடைய கடைசி விமான இயக்கத்தை நடத்திக் காட்டியதன் மூலம் தற்போது கின்னஸ் சாதனைக்கும் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.

தற்போதைய நிலையில் உலகிலேயே மிக மூத்த வயது விமான ஓட்டுநராக இவர்தான் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு அமெரிக்காவின் அயோவா மாகாணத்திலுள்ள ஆண் விமானி ஒருவர் 98 வயதில் விமானத்தை இயக்கி பலரையும் ஆச்சர்யப் படுத்தினார். அவருடைய சாதனையை முறியடித்து தற்போது 99 வயதுடைய ரோபினா ஆஸ்தி உலகிலேயே மூத்த வயதுடைய விமானியாக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். இவரைக் குறித்து மாணவர்கள் கூறும்போது ஆஸ்தி தன்னுடைய பெரும்பலான வாழ்நாளில் ஒரு சிறந்த விமான பயிற்றுநராக இருந்திருக்கிறார். மற்றவர்கள் 1000 மணி நேரத்தில் சொல்லிக் கொடுக்கக்கூடிய விஷயங்களையும் இவர் மிக எளிதாக சொல்லிக் கொடுத்து விடுவார் எனக் கூறியிருக்கின்றனர்.