வீல் சேரில் இருந்தபடியே கின்னஸ் சாதனை… இளம்பெண்ணின் தில்லான அனுபவம் குறித்த வீடியோ!
- IndiaGlitz, [Tuesday,March 09 2021]
இன்றைய காலக்கட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் எவ்வளவோ நவீன வசதிகளுடன் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருவதாக நாம் பெருமைப்பட்டுக் கொள்கிறோம். ஆனால் அவர்கள் ஒவ்வொருவரும் வலிகளையும் வேதனைகளையும் கடந்துதான் இந்த நிலைமையை அடைந்து உள்ளனர் என்பது பலருக்கும் தெரியாமலே இருந்து வருகிறது.
மேலும் மாற்றுத் திறனாளிகளுக்கு இன்றைய காலக்கட்டத்தில் பல வசதிகள் வந்து விட்டதாகவும் நாம் நினைத்துக் கொண்டு இருக்கிறோம். ஆனால் பொருளாதாரத்தில் ஏற்றம் பெற்ற ஒரு சிலரால் மட்டுமே அனைத்து வசதி வாய்ப்புகளையும் அனுபவிக்க முடிகிறது. இப்படி எந்த வசதியும் இல்லாத பல ஆயிரக்கணக்கான குழந்தைகள் தங்களுடைய வீட்டின் மூலையிலோ அல்லது எதாவது ஒரு தொண்டு நிறுவனத்திலோ தங்களுடைய வாழ்க்கையை கழித்து ஒரு நாள் மாண்டும் போகின்றனர்.
இத்தகைய நிலைமைக்கு ஒவ்வொரு அரசாங்கமும் பல முன்னேற்றமான திட்டங்களைக் கொண்டு வருகிறது. இருந்தும் மக்கள் தொகை அளவை கணக்கில் கொண்டு பார்க்கும்போது இப்படியான வசதி வாய்ப்புக்கள் பலருக்கும் எட்டா கனியாக இருந்து வருகிறது. இப்படியான சூழலில் சென்னையை சேர்ந்த பவித்ரா எனும் இளம் பெண் தன்னுடைய அனைத்து வலிகளையும் கடந்து தற்போது ஒரு கின்னஸ் சாதனையாளராக உயர்ந்து இருக்கிறார்.
கின்னஸ் சாதனையாளரான பவித்ராவின் இளமைகால அனுபவம் குறித்தும் அவர் கடந்து வந்த பாதையை குறித்தும் நமக்கு பிரத்யேக பேட்டியாக அளித்து உள்ளார். மாற்றுத் திறனாளிகள் மட்டும் அல்ல, இன்றைய காலக்கட்டத்தைப் பொறுத்த வரையில் ஒவ்வொரு சாதாரண மனிதனும் வாழ்க்கையை திறம்பட நடத்த முடியாமல் திண்டாட வேண்டியுள்ளது. இத்தருணத்தில் பவித்ராவின் இந்த வீடியோ பதிவு அனைவருக்கும் ஒரு எழுச்சி மிகுந்த அனுபவமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.