நடிகர் சிரஞ்சீவிக்கு கின்னஸ் சாதனை விருது.. நடிப்புக்கு இல்லாமல் வேறு துறையில்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் சிரஞ்சீவி 45 ஆண்டுகளாக திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில், நடிப்பைத் தாண்டி, வேறொரு துறையில் அவருக்கு கின்னஸ் சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிரஞ்சீவி, 1978ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில், சிரஞ்சீவியின் நடனத்திற்காக அவருக்கு கின்னஸ் உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது.
இதுவரை, 45 வருடங்களில் 156 திரைப்படங்களில் 539 பாடல்களில் 24 ஆயிரம் நடன ஸ்டெப்களை ஆடியுள்ளார். இதற்காக அவருக்கு இந்த விருது கொடுக்கப்பட்டுள்ளது. திரைத்துறையில் நடனத்திற்காக சிரஞ்சீவிக்கு வழங்கப்பட்ட விருதை பெற்ற பின்னர் அவர் பேசும்போது, "நான் கின்னஸ் சாதனை செய்வேன் என்று எதிர்பார்க்கவில்லை. தற்செயலாக இது நடந்தது. எனக்கு நடிப்பை விட, நடனத்தில் அதிக ஆர்வம் இருக்கிறது என்பதால், இந்த விருது எனக்கு கிடைத்திருக்கலாம். என்னுடைய தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்," என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், நடிகர் சிரஞ்சீவி தற்போது "விசுவாம்பரா" என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகை த்ரிஷா நாயகியாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout