நடிகர் சிரஞ்சீவிக்கு கின்னஸ் சாதனை விருது.. நடிப்புக்கு இல்லாமல் வேறு துறையில்..!

  • IndiaGlitz, [Monday,September 23 2024]

நடிகர் சிரஞ்சீவி 45 ஆண்டுகளாக திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில், நடிப்பைத் தாண்டி, வேறொரு துறையில் அவருக்கு கின்னஸ் சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது.

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிரஞ்சீவி, 1978ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில், சிரஞ்சீவியின் நடனத்திற்காக அவருக்கு கின்னஸ் உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது.

இதுவரை, 45 வருடங்களில் 156 திரைப்படங்களில் 539 பாடல்களில் 24 ஆயிரம் நடன ஸ்டெப்களை ஆடியுள்ளார். இதற்காக அவருக்கு இந்த விருது கொடுக்கப்பட்டுள்ளது. திரைத்துறையில் நடனத்திற்காக சிரஞ்சீவிக்கு வழங்கப்பட்ட விருதை பெற்ற பின்னர் அவர் பேசும்போது, நான் கின்னஸ் சாதனை செய்வேன் என்று எதிர்பார்க்கவில்லை. தற்செயலாக இது நடந்தது. எனக்கு நடிப்பை விட, நடனத்தில் அதிக ஆர்வம் இருக்கிறது என்பதால், இந்த விருது எனக்கு கிடைத்திருக்கலாம். என்னுடைய தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன், என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், நடிகர் சிரஞ்சீவி தற்போது விசுவாம்பரா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகை த்ரிஷா நாயகியாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

More News

ஒரு படத்தோட வசூல் எவ்வளவுங்கிற பிரச்சனை உங்களுக்கு வேண்டாம்.. சூர்யா அறிவுரை..

ஒரு படத்தை படமாக மட்டும் பாருங்கள், ஒரு படம் எவ்வளவு வசூல் செய்தது என்ற பிரச்சனை உங்களுக்கு வேண்டாம் என்று நடிகர் சூர்யா, "மெய்யழகன்" படத்தின் விழாவில் பேசியிருக்கும் வீடியோ இணையத்தில்

அத்தான்.. உங்ககிட்ட ஒண்ணு கேட்கலாமா? கார்த்தியின் 'மெய்யழகன்' டிரைலர்..!

கார்த்தி மற்றும் அரவிந்த்சாமி நடித்த "மெய்யழகன்" திரைப்படம் வரும் 27 ஆம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாக இருக்க இருக்கும் நிலையில், இந்த படத்தின் டிரைலர் சற்று முன் இணையத்தில் வெளியாகி வைரல்

சினிமாவில் சாதிக்க முடியாதவர்களால் தோல்வி அடையும் திரைப்படங்கள்.. பார்த்திபன் ஆதங்கம்..!

சினிமாவில் சாதிக்க முடியாதவர்கள், ஒரு கேமராவை தூக்கி வைத்து, விமர்சனம் என்ற பெயரில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள் என்றும், அந்த வகை வீடியோக்களே

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 தொடங்கும் தேதி இதுவா? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழு சீசன்கள் முடிவடைந்த நிலையில், எட்டாவது சீசன் விரைவில் ஒளிபரப்பாகும் என்று ஏற்கனவே பார்த்தோம். இந்த சீசனை விஜய் சேதுபதி தொகுத்து

த்ரிஷாவுக்கு லிப்கிஸ் கொடுத்த இளைஞர்.. இந்த ஏஐ இன்னும் என்னவெல்லாம் செய்ய போகுதோ?

நடிகை த்ரிஷாவுக்கு இளைஞர் ஒருவர் லிப் லாக் முத்தம் கொடுப்பது போன்று உருவாக்கிய ஏ.ஐ. வீடியோ இணையத்தில் பரவுவதால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.