close
Choose your channels

கின்னஸ் சாதனை புரிந்த தமிழ் நடிகருக்கு கொரோனா: வைரல் புகைப்படம்

Friday, March 26, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கின்னஸ் சாதனை புரிந்த தமிழ் நடிகர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

ஜீவா நடித்த ’டிஷ்யூம்’ சூர்யா நடித்த ’7ஆம் அறிவு’, விஜய் நடித்த ’காவலன்’ உள்பட ஒருசில தமிழ் படங்களிலும் பல மலையாள படங்களிலும் நடித்தவர் நடிகர் பக்ரு. கின்னஸ் சாதனை புரிந்தவரான இவர் கடந்த சில தினங்களாக உடல் நலம் குறைவாக இருந்த நிலையில் கொரோனா பரிசோதனை செய்து பார்த்ததில் பாசிட்டிவ் என்பது உறுதியானது.

இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சைக்குப்பின் உடல் நலம் தேறி வீட்டிலேயே தங்கி சிகிச்சை பெற்று கொண்டிருக்கிறார். பக்ருவுக்கு கொரோனா பாதிப்பு என்பதை அறிந்ததும் ரசிகர்கள் பலர் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் பக்ரு கடந்த 2006ஆம் ஆண்டு காயத்ரி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு பிறந்த முதல் குழந்தை இறந்து விட்ட நிலையில் இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment
Related Videos