72 வயதில் முதுகலைத் தேர்வு எழுதிய எம்.எல்.ஏ… வைரலாகும் தகவல்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஹரியாணாவைச் சேர்ந்த மூத்த எம்.எல்.ஏ ஒருவர் ஊரடங்கு காலத்தைப் பயன்படுத்திக் கொண்டு தனது முதுகலை பட்டத்திற்கான தேர்வை வெற்றிக்கரமாக எழுதி முடித்து இருக்கிறார். 72 வயதான எம்.எல்.ஏ ஈஸ்வர் சிங் தனது அரசியல், அறிவியல் பாடத்திற்கான முதுகலைத் தேர்வை எழுதியுள்ளார். இந்தத் தகவல் இணையத்தை கலக்கி வருகிறது.
ஜனாயக் ஜனதா கட்சியைச் சேர்ந்தவர் ஈஸ்வர் சிங். இவர் குலா சீக்கா தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார். படிப்பின்மீது அலாதி ஆர்வம் கொண்ட இவர் அரசியலுக்கு வந்தப் பின்னரும் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் குருஷேத்ரா பல்கலைக் கழகத்தில் அரசியல், அறிவியல் துறையில் முதுகலைப் பட்டப்படிப்பை தேர்வு செய்து படித்து வருகிறார். கொரோனா ஊரடங்கு காலத்தில் கிடைத்த நேரத்தை முறையாகப் பயன்படுத்திக் கொண்டு தற்போது தனித்தேர்வராக தனது தேர்வை வெற்றிகரமாக எழுதி முடித்து இருக்கிறார்.
10 ஆம் வகுப்பு மட்டுமே முடித்திருந்த ஈஸ்வர் சிங் 1970 களில் அரசியல் மீது கவனத்தை செலுத்தத் தொடங்கினார். பின்னர் 1977 களில் முதல் முறையாகச் சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். அதைத் தொடர்ந்து ஹரியாணா பள்ளிக் கல்வி வாரியத் தலைவராகவும் நியமிக்கப் பட்டிருக்கிறார். 10 ஆம் வகுப்பை மட்டுமே முடித்து இருந்தாலும் அவரால் அரசியலில் இருந்தபோது கல்விசார் கொள்ளைகளை மிகத் திறமையாக உருவாக்க முடிந்து இருக்கிறது. ஆனாலும் அரசியலைவிட கல்வி அவருக்கு பெரிய ஈர்ப்பாக இருந்திருக்கிறது. எனவே தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு கல்வி பக்கம் கவனம் செலுத்த ஆரம்பித்து இருக்கிறார்.
அதைத்தொடர்ந்து தனது 34 ஆவது வயதில் 12 ஆம் வகுப்பை நிறைவு செய்திருக்கிறார். பின்னர் 37 ஆவது வயதில் இளங்கலைப் பட்டத்தை பெற்றார். பின்னர் சிறிது காலம் ஆசிரியராகவும் பணியாற்றி இருக்கிறார். அதைத்தொடர்ந்து வரலாறு, சட்டம் ஆகியத் துறைகளில் முதுகலைப் பட்டம் பெற்று மாநிலங்களவை எம்.பி.யாகவும் உயர்ந்து நின்றார்.
தற்போது கொரோனா காலத்தை உரிய முறையில் பயன்படுத்த வேண்டும் என நினைத்த ஈஸ்வர் சிங் பல்கலைக் கழகத்தில் அரசியல், அறிவியல் துறையில் முதுகலைப் பட்டத்திற்காக விண்ணப்பித்து அதன் தேர்வையும் எழுதி இருக்கிறார். தன்னுடைய கல்வி அறிவை அரசியலில் பயன்படுத்த வேண்டும் என்பதில் ஈஸ்வர் தெளிவாக இருப்பதாகவும் கருத்துகள் வெளியாகி இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments