தந்தை பெயரை மகனுக்கு வைத்த சிவகார்த்திகேயன்!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்த நிலையில் அந்த குழந்தைக்கு தனது தந்தையின் பெயரையே வைத்துள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயன் - ஆர்த்தி தம்பதிக்கு கடந்த மாதம் 12ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது, இதனை அடுத்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ’18 வருடம் கழித்து என் அப்பா என் விரலை பிடித்து இருக்கிறார் மகனாக’ என்று நெகிழ்ச்சியுடன் பதிவு செய்திருந்தார். அவர் தனது தந்தையே மகனாக பிறந்ததை எண்ணி மிகவும் மகிழ்ச்சியுடன் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சற்று முன் சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது குழந்தைக்கு குகன் தாஸ் என்று பெயர் வைத்துள்ளதாக அறிவித்துள்ளார். சிவகார்த்திகேயன் தந்தை பெயர் தாஸ் என்பதை அடுத்து அவர் தனது தந்தையின் பெயரையே மகனுக்கு வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடித்து முடித்த ’டாக்டர்’ திரைப்படம் விரைவில் ரிலீஸாக உள்ள நிலையில் அவர் தற்போது ’அயலான்’ மற்றும் ’டான்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
எங்கள் அன்பு மகனை வாழ்த்திய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்..உங்கள் அன்போடும் ஆசியோடும்
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) August 3, 2021
“குகன் தாஸ்” என பெயர்சூட்டியிருக்கிறோம்????
Heartfelt thanks to each & everyone for showering ur wishes on our little boy..With all ur blessings & love we hv named our son “GUGAN DOSS" ???? pic.twitter.com/MKbpiWHe2D
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments