இப்போதைக்கு எனக்கு பிடிச்சதெல்லாம்… நடிகை அனுஷ்கா சர்மாவின் வைரல் டிவிட்!
Send us your feedback to audioarticles@vaarta.com
காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்தியக் கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலிக்கும் நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும் வாரிசு வந்து விட்டது. இதனால் உற்சாகத்துடன் இந்தியக் கிரிக்கெட்டில் தற்போது விராட் கோலி விளையாடி வருகிறார். இன்னொரு பக்கம் அனுஷ்கா சர்மா குழந்தையுடன் தன்னுடைய நேரத்தை செலவிட்டு வருகிறார்.
“வாமிகா“ எனப் பெயர் வைக்கப்பட்ட இக்குழந்தையின் புகைப்படத்தை இதுவரை அனுஷ்கா இணையத்தில் வெளியிட வில்லை. குழந்தையின் கால்களை மட்டுமே இணையத்தில் வெளியிட்ட அனுஷ்கா தற்போது தனது டிவிட்டரில் ஒரு கருத்தை பதிவிட்டு இருக்கிறார். அதில் இப்போதைக்கு எனக்கு பிடித்தது எல்லாம் Burp Cloth எனப் பதிவிட்டு இருக்கிறார். பிரசவத்திற்கு பிறகு வெளியிடும் இந்தப் புகைப்படத்திலும் அனுஷ்கா படு ஃபிட்டாக இருப்பது பலரையும் ஆச்சர்யப்படுத்தி இருக்கிறது.
திருமணத்திற்கு பிறகு நடிகை அனுஷ்கா திரைப்படத்தில் நடிக்க வில்லை என்றாலும் தொடர்ந்து சினிமா படங்களைத் தயாரித்து வருகிறார். அதோடு விளம்பரப் படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். ஒரு பேஷன் டிசைன் நிறுவனத்தைத் தொடங்கி ஒரு தொழில் அதிபராகவும் இவர் வலம் வருகிறார். இந்நிலையில் அனுஷ்கா சர்மாவின் Burp Cloth பதிவிற்கு ரசிகர்கள் லைக்குகளை பதிவிட்டு வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments