ஜிஎஸ்டி வரிவிதிப்பால் இளையதலைமுறையினர்களுக்கு ஏற்படும் நன்மைகள்
Send us your feedback to audioarticles@vaarta.com
வரும் ஜூலை 1 முதல் இந்தியா முழுவதும் ஜிஎஸ்டி வரிமுறையை மத்திய அரசு நடைமுறைப்படுத்த உள்ளது. இந்த வரிவிதிப்புக்கு பெரும்பாலானோர் எதிர்ப்பு தெரிவித்திருக்கும் நிலையில் இந்த வரிவிதிப்பால் இளையதலைமுறையினர்களுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை நடைமுறை அமலுக்கு வருவதால் லட்சக்கணக்கான சிறு, பெரும் தொழில் செய்வோர் முறையான வரிக்கட்டமைப்பில் இணைந்து கணக்கு காட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.
எனவே பி.காம், எம்பிஏ பைனான்ஸ், சிஏ ஆகிய படிப்பு படித்தவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு ஏற்படும். சிறிய மற்றும் பெரிய நிறுவனங்கள் இனிமேல் அதிகளவில் ரிகார்டுகளை மெயிட்டன் செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என்பதால் முறையான அக்கவுண்ட் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகம் ஏற்படும். மேலும் பி.காம் படிப்பவர்கள் மட்டுமின்றி எந்த பட்டப்படிப்பு படித்திருந்தாலும் ஜிஎஸ்டி குறித்து முறையான பயிற்சி எடுத்தால் அனைவருக்கும் வேலை கிடைக்கும்.
அதுமட்டுமின்றி வழக்கறிஞர்கள், கணக்கு பதிவியல் நிபுணர்கள், மென்பொருள் வல்லுனர்களுக்கும் பல புதிய வாய்ப்புகள் இனி வரும் மாதங்களில் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜிஎஸ்டி வரிவிதிப்பில் ஜவுளி, உணவு பதப்படுத்துதல், தோல் பொருட்களின் உற்பத்தி ஆகியவற்றுக்கு அதிக ஊக்கம் தரப்படுவதால் இத்துறைகள் மேலும் செழிக்கும் என்றும், அதனால் இந்த துறைகளிலும் வேலைவாய்ப்பு அதிகம் ஏற்பட வாய்ப்பு உண்டு என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ஐடி துறையில் தற்போது பல இளைஞர்கள் வேலை இழக்கும் அபாயத்தில் உள்ள நிலையில் ஜிஎஸ்டி வரிவிதிப்பு இளைஞர்களுக்கு ஒரு கலங்கரை விளக்கமாகவே தெரிவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments