மெர்சல்' படத்தில் ஜிஎஸ்டி காட்சிகள் நீக்கம்! தயாரிப்பாளர் திடீர் முடிவு

  • IndiaGlitz, [Friday,October 20 2017]

இளையதளபதி விஜய் நடித்த 'மெர்சல்' படத்தில் இடம்பெற்ற ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு வசனங்கள் படத்தின் ஹைலைட்டாக இருந்தது. ஆனால் இந்த வசனத்திற்கு பாஜக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் வழக்கு போடுவதாக எச்சரித்தார். மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணனும், தேசிய செயலாளர் எச்.ராஜாவும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

ஆனால் காங்கிரஸ், திமுக உள்பட எதிர்க்கட்சிகள் இந்த வசனத்திற்கு ஆதரவு தெரிவித்து கருத்து தெரிவித்தனர். இந்த நிலையில் 'மெர்சல்' தயாரிப்பாளர் மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் அவர்களிடம் தொலைபேசியில் சர்ச்சைக்குரிய ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு குறித்த காட்சிகளை நீக்க சம்மதம் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

'மெர்சல்' தயாரிப்பாளரின் இந்த முடிவால் விஜய் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளார்கள் என்பது அவர்கள் பதிவு செய்து வரும் டுவீட்டுக்களில் இருந்து தெரிய வருகிறது.