பங்குச்சந்தை கட்டிடத்தின் 30வது மாடியில் இருந்து குதித்த ஜிஎஸ்டி கண்காணிப்பாளர்!

  • IndiaGlitz, [Tuesday,May 14 2019]

மும்பை பங்குச்சந்தை கட்டிடத்தின் 30வது மாடியில் இருந்து ஜிஎஸ்டி கண்காணிப்பாளர் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையை சேர்ந்தவர் ஹரீந்தர் கபாடியா என்றா 51 வயது நபர் ஜி.எஸ்.டி. கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தார். அவர் கடந்த சில மாதங்களாக மூளையில் பாதிப்பு ஏற்பட்டு அதற்கான சிகிச்சையும் பெற்று வந்தார். இதனால் அவர் கடந்த எட்டு மாதங்களாக பணிக்கு வரவில்லை என தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று மாலை 6.30 மணியளவில் அவர் மும்பை பங்குச்சந்தையின் 30வது மாடியில் இருந்து குதித்தார். ரத்த வெள்ளத்தில் மிதந்த அவரை மீட்டு அருகில் இருந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மும்பை போலீசார் தற்கொலை வழக்காக பதிவு செய்து இதுகுறித்து மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.