பீட்சா டெலிவரி செய்யும் பெண்ணை சுற்றி வளைத்து அடித்த 4 ரெளடி பெண்கள்: அதிர்ச்சி வீடியோ
Send us your feedback to audioarticles@vaarta.com
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூரில் பீட்சா டெலிவரி செய்யும் பெண்ணை 4 ரவுடி பெண்கள் சுற்றி வளைத்து அடித்து நொறுக்கிய காட்சியின் வீடியோ இணையதளங்களில் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் இந்தூர் என்ற பகுதியில் பீட்சா டெலிவரி செய்யும் இளம்பெண் ஒருவர் தங்களை முறைத்து பார்த்ததாக குற்றம்சாட்டி அவரை நான்கு பெண்கள் அடிக்கத் தொடங்கினர்.
ஈவு இரக்கமின்றி அந்த பெண் கதற கதற நான்கு பேரும் மாறி மாறி அடித்தனர். அதில் ஒரு பெண் கையில் குச்சியால் அடித்தார் என்பதும் இதனால் அடிவாங்கிய பீட்சா டெலிவரி பெண் கதறி அழுத போதிலும் அக்கம் பக்கம் உள்ளவர்கள் யாரும் அந்த பெண்ணுக்கு உதவி செய்ய வராமல் வேடிக்கை பார்த்தது அதைவிட கொடுமையாக இருந்தது.
இதுகுறித்த வீடியோவை அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த பின்னர்தான் காவல்துறையினர் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க தொடங்கியுள்ளனர். தற்போது வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் பீட்சா டெலிவரி செய்யும் பெண்ணிடம் விசாரணை செய்து அவரை அடித்த நான்கு பெண்கள் யார் என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
ஈவு இல்லாத இரக்கமே இல்லாமல் ஒரு பெண்ணை அடித்த நான்கு பெண்களுக்கு கடும் தண்டனை வாங்கி கொடுக்க வேண்டுமென காவல்துறையை பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
Came across this @dominos @dominos_india
— Deepika Narayan Bhardwaj (@DeepikaBhardwaj) June 13, 2022
I hope you're providing legal assistance to this girl who's been assaulted on duty. Hope you help her in filing an assault case against these hooligans.
Take action @MPPoliceOnline pic.twitter.com/kVE9O7Sce3
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com