ஆடையோடு சேர்த்து பெண்களைச் சீண்டினால் பாலியல் குற்றம் ஆகாதா??? சர்ச்சை தீர்ப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆடைக்கு மேல் மார்பகத்தைத் தொட்டு பெண்களிடம் அத்துமீறுவது பாலியல் வன்முறை கிடையாது என மும்பை உயர்நீதிமன்றம் ஒரு வழக்கில் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. இந்தத் தீர்ப்பினால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகி உள்ளனர். ஒரு நபர் ஆடைக்கு மேல் மார்பகங்களை தொட்டாலோ அல்லது தடவினாலோ அது பாலியல் வன்முறை கிடையாது என்றும் இது போக்சோ சட்டப் பிரிவில் வராது என்றும் மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை தீர்ப்பு வழங்கி இருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
கடந்த 2016 ஆம் ஆண்டு மும்பையில் 12 வயது சிறுமி ஒருவரை பக்கத்து வீட்டுக்காரர் கொய்யாப் பழம் கொடுப்பதாகக் கூறி அழைத்துச் சென்று உள்ளார். நீண்ட நேரம் ஆகியும் அந்தச் சிறுமியை காணாததால் அவரது தாய் அக்கம் பக்கத்தில் தேடி உள்ளார். அப்படி தேடியபோது அருகில் இருந்த ஒருவர், பக்கத்து வீட்டுக்காரர் சிறுமியை அழைத்துச் சென்றதாக கூறியுள்ளார். அதையடுத்து பக்கத்து வீட்டில் அந்த தாய் சிறுமியை தேடியுள்ளளார். ஆனால் மாடியில் இருந்து கீழே இறங்கி வந்த அந்தப் பக்கத்து வீட்டுக்காரர் சிறுமி இங்கு இல்லை எனத் தெரிவித்து இருக்கிறார்.
இதையடுத்து சந்தேகம் அடைந்த அந்த தாய் அவரது மாடிக்கு சென்று தாழிடப்பட்ட அறையை திறந்து பார்த்து இருக்கிறார். அப்போது தனது 12 வயது மகள் அழுது கொண்டு இருப்பதைப் பார்த்து பதறி இருக்கிறார். சிறுமியிடம் என்ன நடந்தது எனக் கேட்டப்போது கொய்யப்பழம் தருவதாகக் கூறி தன்னை அழைத்துக் கொண்டு வந்ததாகவும் அடுத்து தன்னுடைய மார்பகங்களை அழுத்தியதோடு ஆடையை கழற்ற முயன்றதாகவும் அந்த சிறுமி கூறி இருக்கிறார். இதனால் அதிர்ந்துபோன அந்த தாய் அப்போதே காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று புகார் அளித்து உள்ளார்.
சிறுமியிடம் வாக்கு மூலம் பெற்றுக்கொண்ட போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து உள்ளனர். அந்த வழக்கு அம்மாவட்ட செஷன் கோர்டில் நடைபெற்று இருக்கிறது. அதற்கான தீர்ப்பில் போக்சோ சட்டத்தின் 8 ஆவது பிரிவின்கீழ் மற்றும் சட்டப்பிரிவு 354, 363, 342 ஆகியப் பிரிவுகளின் படியும் 3 ஆண்டுகால கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.500 அபராதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருக்கிறது.
ஆனால் இந்த வழக்கின் மேல் முறையீடு நாக்பூர் நிதிமன்றத்திற்கு வந்து இருக்கிறது. அந்த வழக்கை புஷ்பா கனேடிவாலா என்பவர் விசாரித்து இருக்கிறார். ஆனால் இவர் வழங்கிய தீர்ப்பில் ஆடையோடு சேர்த்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டால் போக்சோ சட்டத்தில் வராது (பாலியல் தாக்குதல் பிரிவின்கீழ் வராது). இது தவறான செயல்தான். ஆனால் சட்டப்படி இதுபோன்ற செயல்கள் பெண்களின் மாண்புக்கு குந்தகம் விளைவிப்பது என்ற பிரிவின் கீழ்தான் வரும். தோல் மீது தோல் பட்டு செய்யப்படும் அத்துமீறல்தான் பாலியல் தாக்குதல் என சட்டத்தில் கூறப்பட்டு உள்ளது. கைகள் நேரடியாக சிறுமியின் மார்பகத்தில் படவில்லை. இதனால் போக்சோ சட்டத்தின் 8ஆவது பிரிவின் படி குற்றவாளி விடுவிக்கப்படுகிறார்.
ஆனால் ஐபிசி 354 பிரின்கீழ் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு ஒரு வருடம் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.500 அபராதம் என நாக்பூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. இந்நிலையில் இந்த தண்டனை ஒரு முன்னுதாரணமாக மாறிவிடக் கூடாது என பொதுமக்கள் கடும் அதிருப்தி தெரிவித்து இருக்கின்றர். பஸ், ரயில் நிலையம் எனப் பல இடங்களில் சர்வ சாதாரணமாக பெண்களிடம் அத்து மீறல் நடைபெற்று வருகிறது. இதுபோன்ற நிலைமை இருக்கும்போது இப்படி ஒரு தீர்ப்பு வந்தால் இன்னும் நிலைமை மோசமாகி விடும் என்றும் இந்த வழக்கு மேல்முறையீடு செய்யப்பட்டு முறையான தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout