மணமகனின் தந்தையுடன் மணமகளின் தாயார் திடீர் ஓட்டம்: திருமண வீட்டில் பரபரப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
அடுத்த மாதம் ஒரு திருமணம் நடைபெற இருந்த நிலையில் திடீரென மணமகனின் தந்தையும் மணமகளின் தாயார் ஓடிப் போய்விட்டதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது
குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் என்ற பகுதியில் நிச்சயதார்த்தம் முடிந்து பிப்ரவரி மாதம் முதல் வாரம் ஒரு திருமணம் நடக்க இருந்தது. இரு வீட்டாரும் திருமண ஏற்பாடுகளை கவனித்து கொண்டிருந்த போது திடீரென மணமகனின் தந்தையும் மணமகளின் தாயாரும் காணாமல் போனதாக தெரிகிறது. இருவரையும் தேடி பார்த்த உறவினர்கள் அதன் பின்னர் போலீசில் புகார் அளித்தனர்
ந்த நிலையில் இதுகுறித்து விசாரணை செய்த போது மணமகனின் தந்தையும் மணமகளின் தாயார் கல்லூரியில் படிக்கும்போதே காதலித்ததாகவும் ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக வைர வியாபாரி ஒருவரை மணமகளின் தாயார் திருமணம் செய்து கொண்டதாகவும், பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இருவரும் சந்தித்தபோது பழைய காதல் மீண்டும் வளர்ந்ததாகவும் கூறப்படுகிறது
இந்த நிலையில் மணமகனின் தந்தையும் தந்தையும் மணமகளின் தாயார் திடீரென ஓடிப்போய் இருவரும் திருமணம் செய்திருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து மாயமான இருவரையும் தேடி வருகின்றனர். திருமணம் நடைபெற இன்னும் ஒருசில நாட்களே இருக்கும் நிலையில் இருவரும் திடீரென காணாமல் போனதால் மணமகன்-மணமகள் அதிர்ச்சியில் உள்ளனர்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments